தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prashanthneel: விடாமுயற்சி பிரேக்கில் சந்திப்பு.. 3 வருட கால்ஷீட்..கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்!

PrashanthNeel: விடாமுயற்சி பிரேக்கில் சந்திப்பு.. 3 வருட கால்ஷீட்..கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்!

Jul 25, 2024, 03:52 PM IST

google News
PrashanthNeel: அஜித் மற்றும் யாஷ் தொடர்பான காட்சிகள் இடம் பெறும். இந்தப்படங்களை முன்னதாக கே.ஜி.எப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது - டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்!
PrashanthNeel: அஜித் மற்றும் யாஷ் தொடர்பான காட்சிகள் இடம் பெறும். இந்தப்படங்களை முன்னதாக கே.ஜி.எப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது - டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்!

PrashanthNeel: அஜித் மற்றும் யாஷ் தொடர்பான காட்சிகள் இடம் பெறும். இந்தப்படங்களை முன்னதாக கே.ஜி.எப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது - டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்!

PrashanthNeel: கே.ஜி.எஃப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்தான செய்தியை, தினத்தந்தி குழுமத்தின் ஆங்கில பிரிவான டிடி நெக்ஸ்ட் வெளியிட்டு இருக்கிறது.

அஜித்துடன் இணையும் பிரசாந்த் நீல்

அது தொடர்பாக வெளியான செய்தியில்,  “சலார் படத்தின் பாகங்களை முடித்த பின்னர், பிரசாந்த் நீல் அஜித்துடன் இரு திரைப்படங்களில் இணைய இருக்கிறார். இது அஜித்தின் 64 மற்றும் 65 படங்களாகவோ அல்லது 65 மற்றும் 66 ஆவது படங்களாகவோ இருக்கலாம். 

அஜித்தும், இயக்குநர் பிரசாந்த் நீலும் கடந்த மாதம், விடாமுயற்சி படப்பிடிப்பின் பிரேக்கில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது பிரசாந்த், அஜித்தின் 3 வருடத்திற்கான கால் சீட்டுகளை கேட்டு இருக்கிறார். அவர்கள் இருவரும் இணையும் முதல் படமாக இருக்கும் அந்தப்படமானது, அஜித்தின் 64 வது படமாக இருக்கலாம். இது பிரசாந்த் நீலின் முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், தனித்திரைப்படமாக இருக்கும். இந்தப்படத்திற்காக 2025ம் ஆண்டு படப்பிடிப்பிற்கு செல்லும் படக்குழு, 2026ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

கே.ஜி.எஃப் 3 -யில் அஜித் 

இவர்கள் இணையும் இரண்டாவது திரைப்படம் அஜித்தின் 65 அல்லது 66 வது திரைப்படமாக இருக்கலாம். இந்தப்படம் பிரசாந்த் நீலின் யூனிவர்சிற்குள் வரும். அது கே.ஜி.எஃப் 3 - ஆக அமைய இருக்கிறது. அந்தப்படத்தில், யாஷூடன் இணையும் அஜித்திற்கு, படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தின் இறுதியில், அஜித் மற்றும் யாஷ் தொடர்பான காட்சிகள் இடம் பெறும். இந்தப்படங்களை முன்னதாக கே.ஜி.எப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதற்கிடையே அவர் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

விலைமதிப்பற்ற தருணங்கள்

குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் தொடர்பாக முன்பு கூறும் போது "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் விலைமதிப்பற்ற தருணங்கள் உள்ளன. இது எனது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. அஜித் குமார் சாருடன் பணிபுரிவது எனக்கு ஒரு நீண்ட கனவாக இருந்தது. அவருடன் பணிபுரிவதில் நான் எமோஷனலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார் மற்றும் ரவிசங்கர் சார் ஆகியோருக்கு நன்றி’’ எனத் தெரிவித்து இருந்தார்.

ஓடிடி உரிமம்

இதற்கிடையில், படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. 95 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் உரிமையைப் பெற்று உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு இது மிகப்பெரிய சாதனை என்று கூறப்படும் நிலையில், அஜித்திற்கு இந்தப்படத்தில் 163 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் கையாள்கிறார். இப்படத்தை தயாரிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தை தயாரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி