வலிமையானவர் …. யாரை சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
Apr 08, 2022, 01:33 PM IST
நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தீவிரமாக உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார்.
நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழில் நடிகர் தனுஷை வைத்து ’ 3 ‘ என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகக் கால் பதித்தார். இதனையடுத்து அவர் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கினார் .
இவருக்கும் , நடிகர் தனுஷுக்கு கடந்த சில ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக தாங்கள் பிரிவதாக இருவரும் தெரிவித்து இருந்தனர் . இந்த அறிவிப்பு வெளியிட்ட பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வேலைகளில் மிகவும் பிஸியாக மாறி இருக்கிறார் . இவர் இயக்கிய ' முசாபிர் ' இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இதனையடுத்து ராகவா லாரன்ஸுடன் , ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் . பின்னர் நேரடியாக பாலிவுட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராகக் கால் பதிக்க உள்ளார் . இவர் இயக்கிய ' முசாபிர் ' இசை ஆல்பம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இதனையடுத்து ராகவா லாரன்ஸுடன் , ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். பின்னர் நேரடியாக பாலிவுட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராகக் கால் பதிக்க உள்ளார் . தொடர்ந்து பிஸியான வேலைகளில் இறங்கி இருக்கிறார். தான் என்ன புத்தகம் படிக்கிறேன் , எங்கு சென்று வருகிறேன் என அனைத்தையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் .
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , தற்போது தீவிரமாக உடற் பயிற்சியில் இறங்கி இருக்கிறார் .
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் விடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளார் . அதில் , "ஆரோக்கியமே உங்களின் மிகப்பெரிய செல்வம் என்பதை மறந்து விட வேண்டாம் . சுத்தமான உணவுகளை சாப்பிடுங்கள்.
நன்றாக நீர் அருந்துங்கள். மெலிந்தவர் , வலிமையானவர் , ஆனால் ஒரு போதும் அர்த்தமற்றவர் அல்ல " எனக் குறிப்பிட்டு உள்ளார் .
டாபிக்ஸ்