Siddarth and Aditi Rao: Vacationஇல் சித்தார்த் - அதித் ராவ்! பிரபல அரசியல்வாதி கம் நடிகை பகிர்ந்த புகைப்படம்
Jun 04, 2023, 03:02 PM IST
காதலர்கள் என கிசுகிசுகப்படும் சித்தார்த் - அதித் ராவ் ஜோடியாக ராஜஸ்தானுக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு பிரபல அரசியல்வாதியும், நடிகையுமான பினா காக்-ஐ சந்தித்துள்ளனர்.
பினா காக் தனது இன்ஸ்டாவில் சித்தார்த் - அதித் ராவ் ஆகியோருடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், "எனது குழந்தை வீட்டுக்கு வந்து என்னை பார்த்த மகிழ்ச்சியான தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் இரு பிரபலங்களின் பலோயர்களும் வைரலாக்கி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாக்களில் பிரபலங்களாக இருந்து வரும் சித்தார்த் - அதிதி ராவ் ஆகியோர் டேட்டிங்கில் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றி இருவரும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார்கள். இந்த செய்திகளுக்கு அவர் மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளனர்.
ஆனால் அடிக்கடி ஒன்றாக இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், அவ்வப்போது இதுபோன்று ஊர் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் சுற்றியும் வருகிறார்கள். இவர்கள் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியும் வருகின்றன.
கடந்த இருநாள்களுக்கு மும்பை ஏர்போர்டில் சித்தார்த் - அதிதி ஆகியோர் டிராலியுடன் பாப்ராஸிகளுக்கு போஸ் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர் விடுமுறையை கொண்டாட ராஜஸ்தான் வந்திருப்பது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கேனஸ் திரைப்பட விழா ரெட் கார்பெட் நிகழ்வில் மஞ்சள் நிறை கெளன் அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் அதிதி. தற்போது திரைப்படங்கள் தவிர, வெப்சீரிஸிலும் பிஸியாக அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
இதேபோல் சித்தார்த்தும் சில படங்களில் நடித்த வரும் நிலையில், அவரது புதிய படமான டக்கர் வரும் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
கடந்த 2021இல் வெளியான மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டதாக கூறப்படும் நிலையில், இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளனர்.
சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட அதிதி ராவ், அவரை பிரிந்துவிட்டார். அதேபோல் நடிகர் சித்தார்த்தும் மேக்னா என்பவர் திருமணம் செய்து கொண்டு 2007இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
சித்தார்த்தின் புதிய படமான டக்கர் செய்தியாளர் சந்திப்பில், அவரது காதல் வாழ்க்கை தோல்வி குறித்து கேட்டபோது, "தனிப்பட்ட முறையிலும் கனவிலும் இது நடக்கும் என நினைத்ததில்லை. ஆனால் எனது காதல் வாழ்க்கை பற்றி நீங்கள் கவலைப்படுவதால், நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் பேசலாம். மற்றவர்களுக்கோ அல்லது டக்கர் படத்துக்கோ இதில் எந்த சம்மந்தமும் இல்லை" என்று பதில் அளித்தார்.
எது எப்படியாக இருந்தாலும் சினிமாத்துறையில் கிசுகிசுக்கப்படும் ஹாட் ஜோடிகளாக சித்தார்த் - அதிதி ராவ் இருந்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்