தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "நீங்கள் உத்தமரா மிஸ்டர் சீமான்? உங்க ஆபாச வீடியோ ரிலீஸ் ஆகப் போகுதாமே?" அண்ணனுக்காக களமிறங்கிய விஜயலட்சுமி

"நீங்கள் உத்தமரா மிஸ்டர் சீமான்? உங்க ஆபாச வீடியோ ரிலீஸ் ஆகப் போகுதாமே?" அண்ணனுக்காக களமிறங்கிய விஜயலட்சுமி

Nov 04, 2024, 08:32 AM IST

google News
புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்திருப்பார்,இந்த பேச்சைக் கேட்ட நடிகை விஜயலட்சுமி, கோபமடைந்து சீமானை பல கேள்விகள் கேட்டு விமர்சித்துள்ளார்.

ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்துள்ள இவர், பல ஆண்டுகளாக சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரவித்து வருகிறார். இதுதொடர்பாக பல வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்,

இந்நிலையில், விஜய் குறித்து பேசிய சீமானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

நீங்க உத்தமரா மிஸ்டர் சீமான்

அந்த வீடியோவில், " என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க? விஜய் அண்ணனுக்கு ரோட்டோட அந்தப் பக்கம் இரு இல்ல இந்தப் பக்கம் இரு சென்டர்ல இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிறுவன்னு சாபம் எல்லாம் விடுறீங்க? நீங்க என்ன உத்தமனா மிஸ்டர் சீமான்? நான் உங்க ரூட்டுக்கே வரேன், அண்ணன் விஜய்யும் திமுகவும் கொள்கை ரீதியாகத் தானே தவறு பண்ணிருக்காங்க. இத மக்கள் ஒன்னும் சொல்லல நீங்க சொல்லிட்டு இருக்கிங்க. கொள்கா ரீதியா தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்கன்னா எங்கள மாதிரி பெண்களின் வாழ்க்கையை சீரழிச்சு எங்கள நடு ரோட்டுல விட்டீங்களே நீங்க எது அடித்து சாவீங்க?

ஆபாச வீடியோ வெளியாகப் போகுதாமே?

முதலில் உங்கக் கட்சியில் நடக்கும் ஊழலை முதலில் சரி பண்ணுங்க. உங்க கட்சிக்குள்ள தான் நிறைய ஊழல் நடக்குதாம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா உங்களோட ஆபாச வீடியோக்கள ரிலீ,ஸ் பண்ணி உங்க மானத்த வாங்கப் போறாராம்.

திமுகவிற்கு என்ன பண்ணனும்னு திமுகவுக்கு தெரியும், விஜய் அண்ணனுக்கு எனஅன பண்ணனும்னு விஜய் அண்ணாக்குத் தெரியும். இப்படி எள்லாருக்கும் அவங்க அவங்க வேலை என்னான்னு தெரியம்.

24 மணி நேரமும் சாபம்

உலகத்துலயே உங்களுக்கு மட்டும் தான் பிரபாகரன் அண்ணன் கொடுத்த வேலைய செய்யத் தெரியாம, காலைல எழுந்தா சும்மா பப்ளிசிட்டி பண்ணிட்டு மத்தவங்கள சபிச்சிட்டு, நீங்க தான் கூமுட்ட மாதிரி அலைஞ்சுட்டு இருக்கீங்க. அதுனால பெரிய உத்தமர் மாதிரியோ கண்ணகி மாதிரியோ சாபம் எல்லாம் விடாதிங்க. 24 மணி நேரமும் பெண்கள்ல இருந்து நான்தான் சாபம் கொடுக்குறேனே.

கொள்கை ரீதியா தப்பு பண்ணுனவங்களே லாரி அடிச்சு சாவாங்கன்னா, நீங்க தமிழ்நாட்டு மக்கள் செருப்பால அடிச்சே சாவீங்க. மீடியா தயவு செஞ்சு இந்த வீடியோலை டெலிகாஸ்ட் பண்ணுங்க. இத நாம் தமிழர் கட்சியும் சீமானும் கண்டிப்பா பாக்கணும்" என மிக காட்டமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது மிகவும் வைரலாகி வருகிறது.

விஜய் மாநாடு

நடிகர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி வி. சாலையில் நடத்தி முடித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், தன் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சி கொள்கை, இனி அரசியலில் நாம் என்ன செய்ய வேண்டும், இலக்கு என்ன என விளக்கி இருப்பார். அத்துடன், திராவிடம், தமிழ் தேசியம் குறித்தும் பேசி இருப்பார்.

விஜய் கொள்கை அழுகிய கூமுட்டை

இந்நிலையில், விஜய்யின் கருத்துகளை அவ்வப்போது சாடிவந்த இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், அவரது கட்சியின் சார்பில் சென்னை பெரம்பூரில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் விஜய்யை கடுமையாகத் தாக்கி விமர்சித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசியசீமான், நடிகர் விஜய் கட்சியின் அடிப்படையே தவறானது. அவரது கட்சியில் உள்ளது கொள்கை அல்ல. கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை என காட்டமாக பேசியுள்ளார். அத்துடன், ஒரு தரப்புக்கு திராவிடம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஒரு தரப்புக்கு தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்று என நடிகர் விஜய் பேசியதை கேட்டு பயந்துவிட்டேன் என கிண்டல் செய்துள்ளார்.

லாரி அடுத்து செத்துவிடாதே

மேலும், தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்றா ப்ரோ? வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ! எனக் கூறி குட்டிக்கதை சொல்பவன் அல்ல தம்பி.. வரலாற்றை கற்பிக்க வந்தவன் என அவரைப் பற்றி அவரே பெருமையாக பேசினார். ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும், இல்லையென்றால் இந்தப் பக்கத்தில் நிற்க வேண்டும். நடுநிலை என்று கூறிக்கொண்டு சாலைக்கு நடுவே நின்றால், லாரி வரும் போது சாலையில் அடிபட்டு செத்துப் போக நேரிடும் என கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜயலட்சுமி இவ்வாறு பேசியுள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை