தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்.. மனசாட்சியே கிடையாது..ரஜினி பொண்டாட்டிக்கிட்ட கேளுங்க’ - விசித்ரா!

Rajinikanth: படுக்கைக்கு அழைக்கும் விவகாரம்.. மனசாட்சியே கிடையாது..ரஜினி பொண்டாட்டிக்கிட்ட கேளுங்க’ - விசித்ரா!

Sep 04, 2024, 12:22 PM IST

google News
Rajinikanth: எனக்கு நடந்த சம்பவத்தின் பொழுது நான் அப்பொழுதே இதை நடிகர் சங்கம், காவல் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றேன். ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. - விசித்ரா
Rajinikanth: எனக்கு நடந்த சம்பவத்தின் பொழுது நான் அப்பொழுதே இதை நடிகர் சங்கம், காவல் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றேன். ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. - விசித்ரா

Rajinikanth: எனக்கு நடந்த சம்பவத்தின் பொழுது நான் அப்பொழுதே இதை நடிகர் சங்கம், காவல் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றேன். ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. - விசித்ரா

Rajinikanth: மலையாளத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து ரஜினிகாந்த் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய நிலையில், அது குறித்து பிரபல நடிகை விசித்ரா நியூஸ் 18 சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

நடிகர்களின் மனைவிகளிடம் மைக்கை நீட்டுங்கள்

இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் சொல்லப் போனால் இதுகுறித்து எந்த ஒரு முன்னணி நடிகர்களும் பேச முன்வரவில்லை. அப்படி பார்க்கும் பொழுது மீடியாக்கள் தவறான ஆட்களிடம் இது குறித்து கேட்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் முன்னணி நடிகர்களின் மனைவிகளிடம் சென்று கேளுங்கள். அவர்கள் முதலில் இதற்கு குரல் கொடுக்கிறார்களா? என்று கேளுங்கள். அவர்கள் ஹேமா கமிட்டி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள்

நீங்கள் சூப்பர் ஸ்டாரிடம் சென்று கேட்கிறீர்கள். நீங்கள் அவரின் மனைவியிடம் சென்று, அதாவது லதா ரஜினிகாந்திடம் சென்று இது குறித்து கேட்க வேண்டும். அதே அவரது மகள்களான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரிடம் சென்று கேளுங்கள். ரஜினிகாந்த் அவர் படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்ற டென்ஷனில் இருக்கிறார.

குடும்பத்துடன் ரஜினிகாந்த்

மலையாளத்தில்தான் இந்த விஷயம் முதன் முறையாக ஆரம்பித்தது. ஆனாலும், நாங்கள் அதற்காக முன்வந்து குரல் கொடுக்கிறோம். நேர்காணல்கள் அளிக்கிறோம். இதை நாங்கள் யார் சொல்லியும் செய்யவில்லை. ஒரு பெண்ணாக, இன்னொரு பெண் படக்கூடிய கஷ்டம் என்பது எங்களுக்குத்தெரியும்.

அதனால்தான் இதை நாங்கள் முன்வந்து பேசுகிறோம். வெளியில் பேச முன்வராதவர்களுக்கு, அந்த மாதிரியான மனசாட்சி இல்லை என்றால், நாம் என்ன செய்ய முடியும். ஒவ்வொருவரிடமும் சென்று இதுகுறித்து பேசுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது அல்லவா? முதலில் நடிகைகளுக்கு, நடிகைகள் தான் ஆதரவாக நிற்க வேண்டும். எத்தனை நடிகைகள் இது குறித்து வெளியே பேசி இருக்கிறார்கள் கூறுங்கள் பார்ப்போம்.

அப்போதே கூறவில்லையா?

இன்று பலரும் பாலியல் சார்ந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்களை ஏன் புகாராக கொடுக்கவில்லை. ஏன் சம்பவம் நடந்து போதே சொல்லவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் எனக்கு நடந்த சம்பவத்தின் பொழுது நான் அப்பொழுதே இதை நடிகர் சங்கம், காவல் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றேன். ஆனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.

 

விசித்ரா

உண்மையில் நடிகர்கள் கொஞ்சம் பிரபலமான உடன் அவர்களுக்கு அரசியல் ரீதியாகவும், அதிகாரிகளிடமும் நல்ல பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. அப்படி இருக்கும் பொழுது, இது போன்ற பிரச்சினைகளில் அவர்கள் சிக்கும் பொழுது அவர்கள் தங்களுக்கான பவரை பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

நடிகர் சங்கம் இது போன்ற விவகாரங்களில் பெரிதாக நடவடிக்கை எடுத்தது போன்று எனக்கு ஞாபகம் இல்லை அப்படியாக எடுத்திருந்தால் நிச்சயமாக அது மீடியாவில் வந்திருக்கும். தற்போது விஷால் இதற்காக தனி கமிட்டி அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அவர் அதை அறிக்கையாக வெளியிட வேண்டும். அப்பொழுது நான் பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

சமந்தா அண்மையில் தெலுங்கிலும் இதே போன்று ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு தயாரித்து இருக்கும் அறிக்கையையும் அவர்கள் வெளியிட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். உண்மையில் தெலுங்கில் இவ்வளவு பிஸியாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, இப்படிப்பட்ட செய்தியை அவர் பகிர்ந்து இருப்பதே மிக தைரியமான ஒரு விஷயமாகும். தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திரைத்துறையை விட, தெலுங்கு துறை அதிக அரசியல் கொண்டது. அங்கிருந்து அப்படியான ஒரு அறிக்கை வெளியாவது என்பது மிக மிக கடினமான ஒன்று” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி