தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Srividya Kamal Haasan: முதுகுத்தண்டில் புற்றுநோய்; உருகுலைந்த பேரழகு.. கமல் கண்ணீரில் உயிர்விட்ட ஸ்ரீவித்யா!

Srividya kamal haasan: முதுகுத்தண்டில் புற்றுநோய்; உருகுலைந்த பேரழகு.. கமல் கண்ணீரில் உயிர்விட்ட ஸ்ரீவித்யா!

Jan 09, 2024, 06:00 AM IST

google News
அதனால் அவரை தன்னுடைய அண்ணன்கள் என்று அழைப்பார். இந்த நிலையில் தான் ஒரு கட்டத்தில் அவருக்கு முதுகுத்தண்டு புற்றுநோயானது உருவானது. இதனால் மனம் உடைந்து இருந்த ஸ்ரீவித்யா, இங்கு நாம் ஏன் இருக்க வேண்டும் என்று சொல்லி கேரளாவிற்கு சென்று விட்டார்.

கமலுக்கு ஸ்ரீவித்யாவிற்கும் இடையே இருந்த காதல் குறித்து செய்யாறு பாலு ஆகாயம் யூடியூப் சேனலுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில், “ஸ்ரீவித்யாவுக்கு கமலின் மீது ஒரு தலையாக காதல் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போனது. பின்னர் அவர் ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் அவரோ, இவரை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கி நடுரோட்டில் நிப்பாட்டி விட்டார். இதனையடுத்து அவருக்கு எதிராக தனி மனுசியாக நீதிமன்றம் நாடினார். அந்த சமயத்தில் அவருக்கு யாருமே உதவி செய்யவில்லை. செந்தாமரையும் இயக்குனர் இயக்குநர் சக்தியும் மட்டுமே உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். 

அதனால் அவரை தன்னுடைய அண்ணன்கள் என்று அழைப்பார். இந்த நிலையில் தான் ஒரு கட்டத்தில் அவருக்கு முதுகுத்தண்டு புற்றுநோயானது உருவானது. இதனால் மனம் உடைந்து இருந்த ஸ்ரீவித்யா, இங்கு நாம் ஏன் இருக்க வேண்டும் என்று சொல்லி கேரளாவிற்கு சென்று விட்டார். 

அவருக்கு உடல்நிலை மோசமான நிலையில், உங்களது கடைசி ஆசை என்ன என்று கேட்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர் தனக்கு கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.  தகவலை கேட்ட கமல்ஹாசன் சரி, ஏதோ படுத்த படுக்கையாக இருப்பார் என்று நினைத்துக் கொண்டு அவரை பார்க்கச் சென்றார்.

அங்கு சென்றவுடன் அவர் மட்டுமே அறைக்குள் வர வேண்டும் என்ற ஒரு கட்டளை ஸ்ரீவித்யாவிடம் இருந்து வருகிறது. இதனையடுத்து கமல்ஹாசன் உள்ளே செல்கிறார். அவரை பார்த்த கமல் அப்படியே உடைந்து நொறுங்கி விட்டார். 

 லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த ஸ்ரீவித்யாவின் அழகானது அப்படியே உருகுலைந்து கிடந்தது. அவரை பார்த்தவுடன் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீவித்யாவின் உயிர் பிரிந்து விட்டது. 

இது குறித்து கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் பேசும் போது, எல்லோருடைய மரணங்களுக்கும் அழுதது கிடையாது. காரணம் என்னவென்றால் பிறப்பு எப்படியோ அதேபோலதான் இறப்பு என்பதில் எனக்கு ஒரு உறுதியான நிலைப்பாடு இருக்கிறது. 

நான் என்னுடைய வாழ்க்கையில் மூன்று பேருடைய இறப்பிற்கு மட்டுமே அழுது இருக்கிறேன்.ஒன்று என்னுடைய தாய் இரண்டாவது என்னுடைய அண்ணி. மூன்றாவது ஸ்ரீவித்யா என்று சொல்லி இருக்கிறார்” என்று பேசினார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி