Samantha Health : உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் நடிகை சமந்தா!
Nov 29, 2022, 08:14 AM IST
விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமந்தா, தனது சிகிச்சை முடித்து வந்த பின், படப்பிடிப்பில் இணைய முடிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடிகையாக பிஸியாக உள்ளார். சமந்தாவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை பெரிய அளவில் இல்லை என்றாலும், அவரது இரண்டாம் பாதி சினிமா வாழ்க்கை, அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
குறிப்பாக நாகசைத்தன்யாவுடன் திருமணம் செய்த பின், சமந்தாவின் சினிமா ஸ்கோப் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு பாதகமாகவும் மாறியது. இதைத் தொடர்ந்து, நாகசைத்தன்யா-சமந்தா தம்பதி பிரிந்தது.
வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிபவை பொருட்படுத்தாமல், சினிமாவில் முழு தீவிரமாக களமிறங்கினார் சமந்தா. அவரின் உழைப்புக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால், சமந்தாவிற்கு ஆண்டு தோறும் சரும நோய் பாதிப்பு இருந்தது. அதற்காக அவுர் சிகிச்சையும் எடுத்து வந்தார் .
இதற்கிடையில் மயோசிடிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார் சமந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், யசோதா படத்தில் தீவிரமாக அவர் பங்களிப்பு செய்தார். அந்த படத்தின் டப்பிங் பணியை கூட, மருத்துவமனையில் இருந்து கவனித்ததாக கூறப்படுகிறது.
தான் குணமாகி வருவதாக, யசோதா புரமோஷனில் சமந்தா கூறியிருந்தார். ஆனால், உண்மையில் சமந்தா இன்னும் குணமாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாறாக, முன்பை விட அவருக்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், மேல் சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சமந்தா தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல சமந்தா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு உயர் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையில் சமந்தா நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால், தென் கொரிய சிகிச்சை முடிந்த பின், அவற்றை தொடரவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமந்தா, தனது சிகிச்சை முடித்து வந்த பின், படப்பிடிப்பில் இணைய முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் சமந்தா வாடகை தாய் கதாபாத்திரத்தில் நடித்த யசோதா திரைப்படம் கடந்த நவம்பர் 11 ம் தேதி வெளியாகி, 10 நாட்களில் 33 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் மார்க்கெட்டில் சமந்தாவில் நிலை உயர்ந்துள்ளது.
டாபிக்ஸ்