தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ramya Pandian: ‘ஹெல்த் பிரச்சினை..ரொம்ப ரொம்ப வலி.. வேலையும் வரல.. அந்த சமயத்துலதான்’ - வேதனையை பகிர்ந்த ரம்யா பாண்டியன்

Ramya Pandian: ‘ஹெல்த் பிரச்சினை..ரொம்ப ரொம்ப வலி.. வேலையும் வரல.. அந்த சமயத்துலதான்’ - வேதனையை பகிர்ந்த ரம்யா பாண்டியன்

Mar 31, 2024, 05:30 AM IST

google News
நான் உங்களுக்கு ஒன்று கொடுக்கிறேன் என்றால், எனக்கு இன்னொன்று திரும்பி வரும். அதே போல இந்த பிரபஞ்சத்திற்கு நான் ஒன்று கொடுக்கிறேன் என்றால், இந்த பிரபஞ்சமும் எனக்கு ஒன்றை திருப்பிக்கொடுக்கும். இந்த செயல்முறை நமக்குள்ளேயும் நடக்க வேண்டும்.

வாழ்க்கையில் மோசமான சூழ்நிலைகளில் சிக்கிய போது ஆன்மிகம் எப்படி தனக்கு கைகொடுத்தது என்பது குறித்து நடிகை ரம்யா பாண்டியன் பேசி இருக்கிறார். 

இது குறித்து வாவ் லைஃப் சேனலுக்கு பேசிய ரம்யா பாண்டியன், “ நம்முடைய மூச்சு இருக்கும் வரை நாம் வாழ்வோம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சில சூழ்நிலைகளில் நானும் உடைந்து போகி இருக்கிறேன். ஆனால் நான் மிக சீக்கிரமாகவே எழுந்து விடுவேன். 

நான் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கிறவர்களுக்கு பிரச்சினையே இருக்காது என்று அர்த்தமல்ல. அந்த பிரச்சினையை சிரித்த முகத்தோடு எதிர்கொள்கிறோம் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம். 

நான் உங்களுக்கு ஒன்று கொடுக்கிறேன் என்றால், எனக்கு இன்னொன்று திரும்பி வரும். அதே போல இந்த பிரபஞ்சத்திற்கு நான் ஒன்று கொடுக்கிறேன் என்றால், இந்த பிரபஞ்சமும் எனக்கு ஒன்றை திருப்பிக்கொடுக்கும். இந்த செயல்முறை நமக்குள்ளேயும் நடக்க வேண்டும். 

அதாவது, நம்மிடமே நமக்கு ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். அது பாசிட்டிவான எண்ணங்களாக, பாசிட்டிவான சூழ்நிலைகளை உருவாக்கும் விஷயங்களாக, யோகா, இசை என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

இதை நாம் செய்யும் போது, நம்மிடம் இருந்து நமக்கு சில விஷயங்கள் கிடைக்கும். இந்த அவுட்புட்டை நான் பிரபஞ்சத்திடம் கொடுக்கும் பொழுது, இந்த பிரபஞ்சம் எனக்கு சில விஷயங்களை தரும். இதை நான் நம்புகிறேன். இதைத்தான் நான் தற்போதும் பின்பற்றி வருகிறேன். 

என்னை பொருத்தவரை எனக்கு ஒரு விஷயம் வலி கொடுக்கிறது என்றால் அந்த விஷயத்தில் இருந்து நான் நழுவ மாட்டேன் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்ய மாட்டேன் அந்த வழியிலேயே இருந்து அதை எதிர் கொண்டு அதிலிருந்து வெளியே வந்து விடுவேன்.

இந்த சமயத்தில்தான் நான் அதிகமாக கோயில்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். கடவுளை கும்பிட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அதன் மூலமாக ஒருவிதமான நிம்மதி கிடைத்தது. எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ, எது நமக்கு நிம்மதியை தருகிறதோ அதனை நாம் மீண்டும் மீண்டும் செய்வோம்.

என்னை பொறுத்தவரை வாழ்க்கையின் மிகப் பெரிய பரிசு மன நிம்மதிதான். அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது நமது உடலில் சில சக்கரங்கள் இருக்கின்றன. அவை சக்தி நிலையங்களாக இருக்கின்றன. 

இது போன்ற சக்தி நிலையங்கள் இருக்கும் இடத்தில், கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த இடத்திற்கு நாம் செல்லும் பொழுது நம்முடைய சக்தியும், அந்த சக்தியும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

இது தற்போது எனக்குள் அதிகமாகி விட்டது. நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன். முன்பெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அப்படியே உடைந்து விடுவேன். 

கிட்டத்தட்ட அதிலிருந்து வெளியே வருவதற்கு எனக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் பிடிக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஏதாவது ஒரு சம்பவம் எனக்கு வலியை தரும் பட்சத்தில் அதிலிருந்து நான் வெளியே வருவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரங்களை போதுமானதாக இருக்கின்றது.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி