தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Nadhiya: ‘சந்தோசத்தை மட்டும் அனுபவிச்சிட்டு போறேன்’ நடிகை நதியா கூல் பேட்டி!

Actress Nadhiya: ‘சந்தோசத்தை மட்டும் அனுபவிச்சிட்டு போறேன்’ நடிகை நதியா கூல் பேட்டி!

Jul 06, 2023, 06:30 AM IST

google News
நான் ஒரு படம் பண்ணுவேன், மறுபடி மும்பை போயிடுவேன். இப்படி தான் என்னோட ரீ எண்ட்ரி இருந்தது. ( simply.nadiya Instagram)
நான் ஒரு படம் பண்ணுவேன், மறுபடி மும்பை போயிடுவேன். இப்படி தான் என்னோட ரீ எண்ட்ரி இருந்தது.

நான் ஒரு படம் பண்ணுவேன், மறுபடி மும்பை போயிடுவேன். இப்படி தான் என்னோட ரீ எண்ட்ரி இருந்தது.

என்றும் இளமைக்கு சொந்தக்காரர் நடிகை நதியா. இன்றும் கிசுகிசுவில் சிக்காமல் அனைவராலும் பாராட்டப்படும் நடிகை. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நதியா அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

‘‘எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால், உடலும் உள்ளமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போ இருக்கிற சினிமாவில் எல்லாரும் இளமையாக இருக்காங்க. கதை சொல்வதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கதை களத்தில் மாற்றம் வந்திருக்கிறது. முந்தைய சினிமாவிலும் கன்டண்ட் நன்றாக இருந்தது; அதை எடுக்கும் விதம் வேறுவிதமாக இருந்தது. 

இப்போது எல்லாமே மாறிவிட்டது. இன்று ஒரு சீன் எடுக்க நிறைய நேரம் எடுக்கிறார்கள். அப்போதெல்லாம் நாங்கள் வேகவேகமாக காட்சிகள் எடுப்போம். இன்று ஒளிப்பதிவில் பயங்கர வளர்ச்சி ஏற்பட்டு விட்டது. சீன் எடுப்பதில் நேரம் செலவழிப்பதை இப்போதுள்ள சினிமா, கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். சின்ன சின்ன மாற்றங்கள் அன்றைய சினிமாவிலும், இன்றைய சினிமாவிலும் இருந்திருக்கிறது. 

தமிழில் எனக்கு பூவே பூச்சூடவா, எம் குமரன் ஆகிய இரண்டு படங்கள் எனக்கு ரொம்ப முக்கியமான படமாக பார்க்கிறேன். இப்போதும் அந்த இரு படங்கள் பற்றிய பேச்சு இருந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு படம் பண்ணுவேன், மறுபடி மும்பை போயிடுவேன். இப்படி தான் என்னோட ரீ எண்ட்ரி இருந்தது. 

1985-1988 வரை தான் நான் சினிமாவில் இருந்தேன். அதன் பின் திருமணமாகி சென்றுவிட்டேன். அதன் பின் 15 ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் வந்தேன். அது கூட நான் திரும்ப வருவேன்னு நினைக்கவில்லை. அதுவும் ஒரு விபத்தாக தான் நடந்தது. என்னுடைய முதல் படம் எப்படி எதிர்பாராமல் நடந்ததோ, அது போல தான் எம்.குமரன் படமும் விபத்தாக ரீ எண்ட்ரி ஆனது. சரி, நடிப்போம் என்று தான் வந்தேன். அதன் பின் தொடர வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. வந்தால் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். 

ஆனால் அந்த படம் ஹிட் ஆகி வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. தெலுங்கு படம் என்றால், அத்தாரெண்டிக்கி தாரேஹி படம் தான் எனக்கு பேசப்பட்ட படமாக இருந்தது. அது ஒரு அத்தை ரோல். அந்த ரோல் பண்ணனுமா? பண்ணால், அப்புறம் அத்தை கேரக்டரா தானே வரும் என யோசித்தேன். ஆனால், அவர்கள் என்னை சமாதானம் செய்தார்கள். அந்த படம் வந்தது, பயங்கர ஹிட், பயங்கர பேர் கிடைத்தது. 

பூவே பூச்சுடா முதல் ஷாட் எனக்கு நியாபம் இருக்கு. நான் கதவை திறக்கும் காட்சி. பத்மின் அத்தை இருந்தாங்க. அந்த நேரத்தில் பத்மினி அத்தையை என் பெற்றோர் பார்த்து அவ்வளவு உருகிப் போனாங்க. அவங்க கூட நான் நடிப்பதை என் பெற்றோர் ரொம்ப பெருமையா நெனச்சாங்க. 

ஒவ்வொரு ஆண்டும் 80கள் நடிகர்கள் சந்திக்கிறோம். அதற்கு முழு காரணம் சுஹாசினி, குஷ்பூ உள்ளிட்டவர்கள் தான் காரணம். அவர்கள் தான் ஏற்பாடு செய்கிறார்கள். நான் வந்து சந்தோசத்தை மட்டும் அனுபவித்து போகிறேன். நாங்கள் சினிமாவை பற்றி அந்த நேரத்தில் நிறைய பேசுவோம். அந்த சந்திப்பு ரொம்ப நல்லா இருக்கும்’’
என்று அந்த பேட்டியில் நதியா கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி