Actress meena: ‘பல பேர் அவருக்கு நோ சொல்லிட்டாங்க.. ஹீரோன்னு ராஜ்கிரண் வந்தார்! - ‘என் ராசாவின் மனசிலே’ பற்றி மீனா!
May 28, 2023, 06:51 AM IST
நான் படத்திற்கு யார் கதாநாயகன் என்று கேட்டேன். அப்பொது படத்தின் தயாரிப்பாளரே படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் தயாரிப்பாளர் யார் அவர் எப்படி இருப்பார் அது குறித்த எந்த ஐடியாவும் என்னிடம் இல்லை.
"ஒரு நாள் இயக்குநர் கஸ்தூரி ராஜா என்னுடைய வீட்டிற்கு வந்து சில வசனங்களை கொடுத்து அதை ஒரு குறிப்பிட்ட மாடுலேஷனில் பேசச் சொன்னார். சொன்னது போலவே நான் பேசி காண்பித்தேன். ஆனால் எனக்கு ஏதோ நிறைவாக உணர முடியவில்லை. உடனே நான், மேக்கப் போட்டுக் கொண்டு கேமரா முன்னாடி நின்றால் இன்னும் நன்றாக பேசுவேன் என்று சொன்னேன்.
எந்த தைரியத்தில் அப்படி சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் அப்போது மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள். அதிகமாக பேச மாட்டேன். ஆனால் அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை.என்னை அந்தப்படத்திற்காக தேர்ந்தெடுத்தார்.
நான் படத்திற்கு யார் கதாநாயகன் என்று கேட்டேன். அப்பொது படத்தின் தயாரிப்பாளரே படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் தயாரிப்பாளர் யார் அவர் எப்படி இருப்பார் அது குறித்த எந்த ஐடியாவும் என்னிடம் இல்லை. முதல் நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்து இரண்டாவது நாள்தான் ராஜ்கிரண் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அப்போதுதான் அவரை முதன்முறையாக பார்த்தேன். இந்தப்படத்தில் நடிக்க பல பேர் முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்..
எஜமான் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் பொழுதும் எனக்கு குறைவான வயது தான். மனதளவில் நான் 14, 15 வயது பெண்தான். அவர் அதிகமாக பேச மாட்டார். எப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டார். அவர் ஏதாவது ஒரு விஷயம் செய்தால் அது முடிந்த பின்னர் இப்படி செய்யுங்கள் என்று மட்டுமே சொல்வார். அந்தக்கேரக்டர் மிகவும் ஸ்ட்ராங்கான கேரக்டர். எனக்கு சின்ன வயதாக இருந்தாலும் அதை நான் நன்கு புரிந்து நடித்தேன். அதுதான் உண்மையில் ஆக்டிங்.
அப்போது நான் மிகவும் பிஸியாக இருந்த நேரம் அந்த சமயத்தில் தான் கே எஸ் ரவிக்குமார் ‘நாட்டாமை’ படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை கேட்டார். படத்தின் கதை சொன்னபொழுது இதில் நமக்கு எங்கே ஸ்பேஸ் இருக்க போகிறது என்று நான் முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் என்னை சமாதானப்படுத்தினார். மிகவும் பிசியான நேரத்திலும் அவர்களுக்கு டேட் கொடுத்து அந்தப் படத்தில் நடித்தேன். ஒரு நாள் திடீரென்று அழைத்து உங்களின் டூயட் சாங் வந்திருக்கிறது என்று சொன்னார். அதுதான் ‘மீனா பொண்ணு’ பாட்டு. அதை கேட்டு நான் மிகவும் குஷி ஆகிவிட்டேன்.என்னுடைய பெயரில் ஒரு பாட்டா என்று ஆச்சரியமாக கேட்டேன்” என்று பேசினார்.
நன்றி : சினி உலகம்
டாபிக்ஸ்