தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Meena: ‘பப் வர அழைத்தார்கள்’ நடிகை மீனா ஓப்பன் டாக்!

Actress Meena: ‘பப் வர அழைத்தார்கள்’ நடிகை மீனா ஓப்பன் டாக்!

HT Tamil Desk HT Tamil

Mar 16, 2023, 07:01 AM IST

google News
இன்று இருக்கும் மீனா அப்படி இல்லை. இன்று நான் வெளிநாடு கூட, தனியாக போகிறேன். இந்த சுதந்திரத்தை கொடுத்தது என் கணவர் தான். அவர் தான் எனக்கு கற்றுத்தந்தார். (meenasagar16 Instagram)
இன்று இருக்கும் மீனா அப்படி இல்லை. இன்று நான் வெளிநாடு கூட, தனியாக போகிறேன். இந்த சுதந்திரத்தை கொடுத்தது என் கணவர் தான். அவர் தான் எனக்கு கற்றுத்தந்தார்.

இன்று இருக்கும் மீனா அப்படி இல்லை. இன்று நான் வெளிநாடு கூட, தனியாக போகிறேன். இந்த சுதந்திரத்தை கொடுத்தது என் கணவர் தான். அவர் தான் எனக்கு கற்றுத்தந்தார்.

பிரபல நடிகை மீனா, பிரபல இணையதளம் ஒன்றிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி இதோ:

‘‘பள்ளி, கல்லூரி போய் அறிவு வளர்க்க முடியவில்லை என்றாலும், கேள்வி ஞானத்தில் சாதாரண வாழ்க்கையை அறிந்து கொண்டேன். நடிக்கிறது நம்ம தொழில் என்றாலும், உட்காரும் போது மற்றவர்களிடம் நாட்டு நடப்புகளை கேட்டு தெரிந்து கொள்வேன். டிவி பார்ப்பதோ, பத்திரிக்கை படிப்பதோ அதன் மூலம் வெளி உலகை அறிய முடியவில்லை என்றாலும், செவி வழியாக அனைத்தையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டேன். 

டிரைவரில் தொடங்கி, அனைவரிடம் அன்றாட நாட்டு நடப்பை பேசி தெரிந்து கொள்வேன். இளம் வயதில் எனக்கு நிறைய ஃபாய் ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. எனக்கு அப்போ அது தெரியல. இப்போ தான், எனக்கு அதற்கான அர்த்தமே தெரிய வந்தது. 

2000க்கு அப்புறம் தான், இன்டஸ்ட்ரியில் எல்லாமே மாறியது. புதுசு புதுசா நிறைய பேரு வந்தாங்க. க்ளப்பிங், பப்பிங் எல்லாம் அப்போ தான் ஸ்டார்ட் ஆனது. அப்போ ‘அவங்க போறாங்க, இவங்க போறாங்க.. நீங்களும் கலந்துக்கோங்க’ என்று அழைப்பார்கள். எங்கம்மா, ‘அதெல்லாம் கூடாது’ என்று சொல்லிவிடுவார்கள். 

‘இல்லமா… எல்லாரும் பெண்கள் தான், அவங்க போறாங்க நானும் போகவா?’ என்று அம்மாவிடம் கேட்பேன், ‘இல்லை, இல்லை வேண்டவே வேண்டாம்’ என்று கூறிவிடுவார். என்னை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும், அதே நேரத்தில் எந்த கெட்டப்பெயரும் வராமல், நான் நல்ல இடத்தில் செட்டில் ஆக வேண்டும்’ என்று என் அம்மா விரும்பினார். 

 ஆனால், நான் அம்மாவிடம் சண்டை போட்டிருக்கேன். ‘எல்லாரும் பெண்கள் தானே, அவங்க போறாங்க, நானும் பேறேன்’ என்று வாதிட்டேன்,’ ஆனால் அனுமதி மட்டும் கடைசி வரை தரமாட்டார்கள். அப்போ நான் தனியா இருந்ததை விட, என் கூட ஆள் இல்லாமல் இருந்த நிமிடமே இருக்காது. 

ஆனால், இன்று இருக்கும் மீனா அப்படி இல்லை. இன்று நான் வெளிநாடு கூட, தனியாக போகிறேன். இந்த சுதந்திரத்தை கொடுத்தது என் கணவர் தான். அவர் தான் எனக்கு கற்றுத்தந்தார். ‘இத்தனை நாள் உங்க அம்மா சொன்னாங்க ஓகே, இனிமேலும் இப்படி இருக்க கூடாது’ என்று அவர் தான் என்னிடம் கூறினார். 

எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளாதே, பிடிக்கவில்லையென்றால் முடியாது என்று சொல்ல பழகிக் கொள்ள என்பதை அவர் தான் சொன்னார். ‘முடியாது’ என்தை கூட அவர் தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லும் போது, என் அம்மாவால் எதுவும் சொல்ல முடியவில்லை,’’
என்று அந்த பேட்டியில் மீனா தெரிவித்துள்ளார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி