தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Maheshwari: “மீனாவ அந்த கோலத்துல எப்படி பார்ப்பேன்.. சாகர் ரொம்ப நல்லவர்.. சே.. ”- நடிகை மகேஷ்வரி எமோஷனல்!

Actress Maheshwari: “மீனாவ அந்த கோலத்துல எப்படி பார்ப்பேன்.. சாகர் ரொம்ப நல்லவர்.. சே.. ”- நடிகை மகேஷ்வரி எமோஷனல்!

Jul 30, 2023, 06:30 AM IST

google News
மீனா கணவரின் இறுதி நிமிடங்களில் தான் பங்குகொள்ளாத காரணத்தை பிரபல நடிகையான மகேஷ்வரி விளக்குகிறார்.
மீனா கணவரின் இறுதி நிமிடங்களில் தான் பங்குகொள்ளாத காரணத்தை பிரபல நடிகையான மகேஷ்வரி விளக்குகிறார்.

மீனா கணவரின் இறுதி நிமிடங்களில் தான் பங்குகொள்ளாத காரணத்தை பிரபல நடிகையான மகேஷ்வரி விளக்குகிறார்.

உண்மை என்னவென்றால் மீனாவின் கணவர் வித்யாசாகரை எனக்கு மிக மிக பிடிக்கும். மீனா எப்பொழுது சாகரை சந்தித்தாரோ, அப்போதிலிருந்தே எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பரும் கூட. 

கடைசியாக நான் சாகரை ஹைதராபாத்தில் நடைபெற்ற இரவு விருந்தில் பார்த்தேன். அவர் மிகவும் அன்பான மனிதர். மிகவும் நேர்மையாக நன்றாக நடந்து கொள்வார். மீனாவின் கணவர் சாகர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் எனக்கு மிக மிக கஷ்டமாக இருந்தது. அங்கு சென்று அவரை பார்ப்பதற்கான தைரியம் எனக்கு ஒரு துளி கூட கிடையாது. 

இன்னொன்று எனக்கு அவரைப் பார்ப்பதற்கு விருப்பமும் இல்லை ஏனென்றால், அவரை நான் பார்த்து விட்டால் அந்த ஒரு நெகட்டிவான மொமண்ட் என்னுடைய வாழ்க்கையில் மிக மிக சோகமான, மறக்க முடியாத ஒரு மொமண்ட்டாக எப்போதுமே மனதிற்குள் இருக்கும். 

அவர் என்னை எப்போதும் மேகி மேகி என்று அன்பாக கூப்பிடுவார். அப்படிப்பட்ட ஒரு அன்பான மனிதரை நான் அங்கு அப்படியான சூழ்நிலையில் பார்க்க விரும்பவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் மீனாவை அந்த கோலத்தில் பார்ப்பதற்கு எனக்கு தைரியம் கிடையாது. மீனாவுக்கு எனக்குமான நட்பு கிட்டத்தட்ட 30 வருடங்கள் கொண்டது. அந்தநாள் துக்கமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் வந்து அவரைப் பார்த்தேன்

பொதுவாக இது மாதிரியான இறப்புகளில் தேவையில்லாத தவறான தகவல்கள் பரவுகின்றன. அவர்கள் அப்படியான ஒரு துக்க நிலையில் இருக்கும்பொழுது, அவர்களை பற்றி தெரியாத தவறான தகவல்களை தங்களுடைய சுய லாபத்திற்காக பரப்புவது என்பது மிக மிக தவறான விஷயம். அவர்கள் என்ன மாதிரியான துக்கத்தில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் மட்டுமே தெரியும். நமக்கான பணத்தையோ பிரபலத்தையோ வேறு எந்த வழியிலாவது கஷ்டப்பட்டு தேடிக்கொள்ளலாம்.” என்றார். 

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி