'நான் ரோட்டுல நடந்து வந்தா 4 பேர் பாக்கணும்.. கல்யாணம் பண்ணுணா இதெல்லாம் முடியாது'.. கோவை சரளா ஓபன் டாக்
Dec 18, 2024, 02:04 PM IST
இப்போது எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு மக்கள் படுற பாட்ட எல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பா வருது என நடிகை கோவை சரளா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு எப்படி ஆச்சி மனோரமா தவிர்க்க முடியாத நடிகையாக மாறினாரோ, அதே போல் தமிழ் சினிமாவிற்குள் அவரைப் போலவே மக்கள் மனதில் சிறகடித்து பறந்தவர் கோவை சரளா.
மக்கள் மத்தியில் பிரபலம்
கோவை சரளா சினிமாவில் அறிமுகமான புதிதில் இவர் வயது முதிர்ந்த பெண்ணாகவும் குடும்பபாங்கான கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார். பின் மெல்ல மெல்ல இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பிரபலமாகி, இவருக்கென வசனங்கள், தனி காட்சிகள் வைத்து பின், கவுண்டமனி, செந்தில், வடிவேலு போன்ற காமெடி நடிகர்கள் மட்டுமல்லாமல், கமல் போன்ற பெரும் கதாநாயகனுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்,
திருமணம் மீது செல்லாத ஆர்வம்
காலம் செல்ல செல்ல இவர் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்ததால் காதல், திருமணம் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தாமல் நடிப்பில் தன் நாட்டத்தை அதிகரித்து வந்தார்.
இதன் காரணமாக அவர், தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் கோவை சரளா நடிகர் சித்ரா லக்ஷ்மணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் இதுவரை ஏன் திருமணம் செய்யவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
எப்படி இருந்தாலும் வாழ முடியும்
அந்தப் பேட்டியில், இப்போது எல்லாம் திருமணம் செய்தவர்களைப் பார்த்தாலே சிரிப்பு தான் வருகிறது. யார் இருந்தாலும் இல்லை என்றாலும் நம்மால் வாழ முடியும். கல்யாணம் பண்ணிட்டோம் என்பதற்காக கடைசிவரை அவரோட கைய பிடித்துக் கொண்டா போக முடியும்.
அவர் எப்படியும் ஒருநாள் நம்ம விட்டுட்டு போயிடத்தான் போறாரு. அது விட்டுட்டு ஓடிப் போயிருவாறோ இல்ல, ஒரேடியா போறாறோ தெரியல.
நான் கல்யாண வாழ்க்கைய தொலைச்சிட்ட்னோன்னு ஒருநாள் கூட நெனச்சதே இல்ல. என் வாழ்க்கையில அந்த சீனே கிடையாது. என் வாழ்க்கையில் வராம ஒருத்தன் தப்பிச்சிட்டான்னு நெனச்சி சந்தோஷம் தான் படுறேன்.
ஆன்மீகம் எனக்குள்ள ஊடுருவிச்சு
சின்ன வயசுல இருந்தே என்னையும் அறியாமல் ஆன்மீகம் எனக்குள் ஊடுருவிடுச்சி. என் எதிர்காலம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என ஒரு திட்டம் இருந்தது.
5 வயசுலயே பிரபலமாகனும், நான் ரோட்டுல இறங்கி வந்தா 4 பேர் என்ன பாக்கணும்னு நினைச்சேன். அந்த திட்டம் இருக்கும் போது நான் காதல், கல்யாணம்ன்னு நினைச்சா வேலைக்கு ஆகாது. அதுனால என் பார்வை குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி இருந்தது என்றார்.
வயதுக்கு மீறிய நடிப்பு
எம். ஜி. ஆரின் படங்களைப் பார்த்து தான் கோவை சரளாவுக்கு நடிக்க ஆர்வம் வந்தது இருப்பதாக அவரே பல முறை சொல்லி இருக்கிறார். அதனால் படிப்பை முடித்துவிட்டு அக்கா, அப்பாவின் ஆதரவுடன் திரையுலகில் நுழைந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கோவை சரளாவுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது.
விஜயகுமார், கே. ஆர். நடிகர் விஜயாவுடன் வெள்ளி ரதம் படத்தில் நடித்தார். பின்னர் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, இரண்டாவது படமான முந்தானை முடிச்சு படத்தில் 32 வயது கர்ப்பிணியாக நடித்தார். இரண்டு வருடங்கள் கழித்து சின்ன வீடு என்ற படத்தில் நடித்தார். இதில் பாக்யராஜ் கேரக்டரின் 65 வயது அம்மாவாக நடிகை நடித்திருந்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்