தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Khushbu: அவ்வளவு சண்டை.. ‘இவர ஏன் கல்யாணம் பண்ணேன்னு நினைச்சு வருத்தப்பட்டு..’ - உண்மையை உடைத்த குஷ்பு!

Actress khushbu: அவ்வளவு சண்டை.. ‘இவர ஏன் கல்யாணம் பண்ணேன்னு நினைச்சு வருத்தப்பட்டு..’ - உண்மையை உடைத்த குஷ்பு!

Nov 20, 2023, 06:00 AM IST

google News
பிரபல நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு தன்னுடைய காதல் கதையை பல வருடங்களுக்கு முன்னதாக குமுதம் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டிதான் இது!
பிரபல நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு தன்னுடைய காதல் கதையை பல வருடங்களுக்கு முன்னதாக குமுதம் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டிதான் இது!

பிரபல நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பு தன்னுடைய காதல் கதையை பல வருடங்களுக்கு முன்னதாக குமுதம் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டிதான் இது!

இது குறித்து அவர் பேசும் போது, “ நானும் சுந்தர் சியும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் காதலித்தோம். அதன் பின்னர்தான் திருமணம் செய்து கொண்டோம். உண்மையில் சொல்லப் போனால் சுந்தர்சியுடன் இணைந்து நான் வளர்ந்திருக்கிறேன். 

எங்களுடைய குடும்ப வாழ்க்கையில் எப்பொழுதுமே இன்பம் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது. எங்களுக்குள் சண்டையே வராது, எங்களுக்குள் கசப்பான விஷயங்கள் இல்லை என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. சராசரி கணவன் மனைவிக்குள், என்னென்ன பிரச்சினைகள் வருமோ அது எங்களுக்கும் வந்திருக்கிறது.

எங்கள் இரண்டு பேருக்கும் இடையே உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், நீ எனக்காக இப்படி மாறு..நான் உனக்காக அப்படி மாறுகிறேன் என்று ஒருவருக்கொருவர் சொன்னதே கிடையாது. 

ஒருவரை ஒருவர், நாங்களே நன்றாக புரிந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்தோம். இன்றைக்கு ஒரு பிரச்சினை என்றால், அந்தப் பிரச்சினை குறித்து பத்து நாட்கள் கழித்து, மீண்டும் பேச மாட்டோம். 

ஒரு பிரச்சினையை ஒரு நேரத்தில் பேசினால், அத்தோடு அந்த பிரச்சினையை விட்டு விடுவோம். நாங்கள் சினிமா துறையில் இருப்பதால், ஒருவரின் மீது ஒருவருக்கு அதீத நம்பிக்கை வேண்டும். காரணம், இங்கு எங்களைப் பற்றி அதிகமான செய்திகள், வதந்திகள் வெளிவரும். 

அதே சமயத்தில், ஒன்று என்றால், பத்து சொல்வதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயம் என்னுடைய காதுக்கு வருவதற்குள், அது 10 பேருக்கு, 10 விதமாக சென்று சேர்ந்திருக்கும். ஆனால், இதுவரை நான் அவரிடமோ, அவர் என்னிடமோ எந்த ஒரு கேள்வியும் கேட்டது கிடையாது. 

எங்களைப் பொறுத்தவரை நம்பிக்கைதான் வாழ்க்கை. அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், ஒருவரின் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை. அவர் எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் வெளியில் இருந்து யாரும் எனக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள். அதேபோல, நான் அவரிடம் எந்த அளவு மரியாதை வைத்திருக்கிறேன் உள்ளிட்டவற்றையெல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை.  

என்னுடைய வாழ்க்கையிலும், ஒரு கட்டத்தில் ஏன் இவரை கல்யாணம் செய்து கொண்டோம் என்று நினைத்த காலம் வந்திருக்கிறது. அவருக்கும் அதே போன்றதொரு காலம் வந்திருக்கிறது. ஆனால் அந்த சமயங்களில் எல்லாமே ஒருவரின் மீது ஒருவர் வைத்திருந்த காதல், அன்பு உள்ளிட்டவை எங்களை இவ்வளவு வருடங்கள் பயணிக்க வைத்திருக்கிறது. 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி