Kasthuri: 'இயக்குநர்களின் தொல்லையால் 3 படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன்.. விலைமாதர்கள் நடிக்கிறாங்க’ - நடிகை கஸ்தூரி
Sep 07, 2024, 12:15 PM IST
Kasthuri: இயக்குநர்களின் தொல்லையால் 3 படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன் என்றும், சினிமாவில் விலைமாதர்கள் நடிக்கிறாங்க எனவும் நடிகை கஸ்தூரி பேட்டியளித்துள்ளார்.
Kasthuri: இயக்குநர்களின் தொல்லையால் 3 படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன் எனவும், விலைமாதர்கள் நடிக்கிறாங்க எனவும் நடிகை கஸ்தூரி பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘’சினிமாவில் செக்ஸ் இருக்குதா அப்படின்னு கேட்டால் இருக்குது. நடிகை சான்ஸ் வாங்க ஏமாறுறவங்க இருக்கிறார்களா என்றால் இருக்கிறார்கள். ஆனால், சமூகம் ஏமாறுபவர்களைத் தண்டிக்குது. சுட்டிக்காட்டுது. ஏமாற்றுபவனை கேள்வியே கேட்பதே இல்லை. நீ அந்த ஏமாத்துறவனை கேள்வி கேளுன்னுதான் சொல்வோம். சில பெண்கள் ஏமாறும்போது, அது தவறுன்னு சொல்றேன்.
ஆனால், அந்த குற்றத்துக்கு பொறுப்பு யார். பேராசை பெருநஷ்டம். நிறையபேர் எம்.எல்.எம்மில்போய் துட்டுபோட்டு ஏமாறுவார்கள். அதையெல்லாம் சுட்டிக்காட்டினால், அது பக்கத்து வீட்டுக்காரனின் ஏமாற்றம். நமக்கு இது சொன்னது மிக நம்பிக்கையான ஆள். இது நம்பிக்கையான இடம் அப்படி என்று சொல்லி மீண்டும்போய் எம்.எல்.எம் மோசடியில் போய் சிக்குவார்கள். இன்றைக்கு வரைக்கு அந்த ஏமாற்றம் தொடர்ந்துகொண்டு தானே இருக்கிறது.
சாமியார்களிடம் சென்று ஏமாறுகிறார்கள்:நடிகை கஸ்தூரி
இவ்வளவுநாட்களாக நிறையப்பேர் குழந்தை இல்லை, எனக்கு இவ்வளவு பிரச்னை இருக்கு என்று சாமியார்கள்கிட்டப்போய் ஏமாறுறாங்க. இப்படிதான் சூழல் இருக்குது. உடனே குற்றவாளியாக, அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணை சொல்வீர்களா. அந்தப் பெண்ணை முட்டாள் என்றுகூட சொல்லுங்க.
15 வயதில் ஒரு பெண் நடிக்க வருது. உன்னை நான் நன்றாக ஆக்குறேன் அப்படின்னு ஒருத்தன் சொல்றான். உடனே,ஏமாறுது. இன்னொருத்தன் வருவான். அவன் கிடக்கான். உன்னை நான் நல்ல விதமாகப் பார்த்து வளர்த்துவிடுவேன்னு சொல்வான். அங்கேயும் அந்தப்பெண் மீண்டும் ஏமாறும். இப்படி பல ஏமாற்றங்கள் நடக்கும். இன்னொன்னு குடும்பச்சூழல் காரணமாக பெண்கள் ஏமாறுகிறார்கள்.
குடும்பத்தில் சண்டைபோட்டு சினிமா ஆசையில் பெண்கள் ஓடி வருகிறார்கள். தோத்த முகத்தோட வீட்டுக்குப்போக முடியாது அப்படி என்கிற கட்டாயத்தில் இருப்பாங்க. அப்போது சென்னையில் சான்ஸ் தேட வீடு எடுக்கணும். சாப்பிடணும். அப்படி என்றால், அதற்கு வருவாய் வேண்டும்.
15 வயதில் சினிமாவை நம்பி வருபவர்கள் சான்ஸ் தேடுவார்களா, கடையில்போய் வேலை செய்வார்களா, வேலை செய்தால் நான்கு நாட்கள் லீவுபோட்டுவிட்டு ஆடிசன் போகமுடியாது இல்லையா. அப்போது அவர்கள் என்ன செய்வார்கள். இதெல்லாம் தவறு நடக்கக்கூடிய சூழல்கள். வறுமைக்காக வந்தவர்களும் இருக்கிறார்கள். வெகுசிலர் விலை மாதர்களாகவே வந்து நடிக்க சான்ஸ் தேடுவார்கள். அவர்களுக்கு சினிமாவில் தங்கள் முகத்தைக் காட்டிவிட்டால், தங்களது ரேட் கொஞ்சம் கூடும். தங்கள் தொழிலுக்கு நல்லது என்று சொல்லி சிலர் அதைச்செய்வார்கள். அவர்கள் நடிக்கிறதுக்காக வரவில்லை. ஆனால், பத்திரிகையாளர்கள் எப்படி எழுதுவாங்க. போலீஸில் ரைடில் நடிகை கைது அப்படின்னு சொல்வாங்க. அழகிகள் கைது அப்படின்னு போடுவாங்க. அவங்க நடிகையே கிடையாது.
உப்புமா கம்பெனியில் ஏமாத்துறாங்க: நடிகை கஸ்தூரி
எத்தனையோபேர் கல்யாணம்பண்ணுறேன் சொல்லி ஜல்சா பண்ணிகைவிட்டால், குற்றம் என வைத்துக்கொண்டால், இதுவும் குற்றம் தானே. சில உப்புமா கம்பெனி என்னசெய்யும் நடிகர்களாக்குகிறேன் சொல்லி பணம் வாங்கும். அதேமாதிரி, நடிகைகள் முகத்தினை காட்டி, வட்டிக்குப் பணம் வாங்கி ஏமாத்துவாங்க. நல்லதுகெட்டது தெரியாவதவர்கள்கிட்ட சுலபமாக ஏமாத்துவாங்க.
இந்த பேட்டியைப் பார்த்துட்டு, ஒருத்தன் ஓப்பனாக, நீ எத்தனை பேர் கூட படுக்கையைப் பகிர்ந்திருப்ப அப்படின்னு கேட்பான். நான் படுத்தேன்னு அவன் பார்த்தானான்னு கேட்கிறேன். உடனே, எனக்குத் தெரியாதா, நீ சினிமாவிலேயே கவர்ச்சி நடனம் ஆடுன. சும்மாவா இருந்திருப்பன்னு சொல்வான். என்னோட படுக்கையைப் பற்றி பேசிறதுதான் சிலருக்கு வேலையாப்போச்சு. அவர்களுக்கென்று தனிவேலை இல்லையா..
காதலிக்கிறவன் எல்லோரும் லிவிங்டூகெதரில் தான் இருக்காங்க. பெண்களே 30 வயதுக்குமேல் தான் கல்யாணம்பண்ணுறாங்க. தவறுன்னு சொல்றவன் வீட்டிலேயே அப்படிதான் தவறு நடக்குது. கற்பு என்பது இருபாலருக்கு வைக்கவேண்டாமா. பெண்களுக்கு மட்டும்தான் கற்பா?.
சினிமாவில் பெண் பித்து பிடித்து அலையும் இயக்குநர்கள் இருக்கிறார்கள். குடிக்கு அடிமையான தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். பெண்களை யூஸ் செய்து ஏமாற்றும் ஆண்கள் கண்டிப்பாக சினிமாவில் இருக்கிறார்கள். அவர்கள் பற்றிய பாலியல் புகார்கள் வெளியே வரணும். தண்டனை கிடைக்கணும். அப்போதுதான் இந்த மாதிரி நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை பண்றது குறையும். இயக்குநர்களின் தொல்லையால் நான் ஒரு மூன்று படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். அது எனக்கே நடந்துச்சு. சிஸ்டத்தை கிளீன் பண்றேன்னு சொன்ன, ரஜினிக்கு இங்கே நடக்கும் பாலியல் ரீதியிலான பிரச்னைகள் பற்றி தெரியாதுன்னு பேட்டியில் சொன்னால் நம்புற மாதிரியா இருக்கு’’ என்றார்.
நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்!
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. முகப்பு புகைப்படத்துக்கும் பேட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு செய்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது!