தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பரபரப்பாக வெளியான சிம்பு பட நடிகையின் திருமண போட்டோஸ்.. மாப்பிள்ளைக்கு இது 2ம் திருமணமா?

பரபரப்பாக வெளியான சிம்பு பட நடிகையின் திருமண போட்டோஸ்.. மாப்பிள்ளைக்கு இது 2ம் திருமணமா?

Oct 23, 2024, 02:53 PM IST

google News
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தார்.

சினிமா குடும்பத்திலிருந்து வந்த நடிகை

இவர் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், நடிகையாவதற்கு முன்னரே பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அவர், உடல் எடையை முழுவதுமாக குறைத்து மக்களிந் ஆசை நாயகியாக தெலுங்கில் வலம் வர ஆரம்பித்தார். பின் மலையாளப் படங்களிலும், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதரஷனுக்கு கல்யாணம்

இந்த சமயத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் திருமண வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் சீரியல் நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரனை நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஸ்ரீராம் ராமச்சந்திரன் ஏற்கனவே திருமணமானவர் எனவும், இவர்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள், எப்படி எந்த அறிவிப்பும் இன்றி, திரையுலகில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது நிஜ திருமணம் இல்லை

இந்த வீடியோவால் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில், இந்த வீடியோ குறித்து மேலும் சில தகவல்களும் வெளியானது.

அதில், நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கும் சீரியல் நடிகர் ஸ்ரீராமிற்கும் நடந்த திருமணம் விளம்பரம் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட வீடியோ எனவும், அந்த வீடியோவை நடிகர் ஸ்ரீராம் அவரது சோசியல் மீடியாவில் பதிவிட்டதால் தான் இவ்வளவு கலவரத்திற்கும் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக் கடை விளம்பரம்

யெஸ் பாரத் வெட்டிங் கலெக்ஷன் எனும் நகைக் கடையின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ தான் இது எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதனால், கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணம் ஆகவில்லை என தெரிந்த பின் தான் ரசிகர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தியுள்ளனர்.

பிரபலங்களால் வெறுப்படையும் மக்கள்

மலையாள சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்ரீராமிற்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அவரது மனைவி தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இந்த சமயத்தில் அவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷனை திருமணம் செய்தது தான் பலரையும் பேசுபொருளாக்கி உள்ளது. சமீப காலங்களில் திரைப்பிரபலங்கள் தங்கள் படங்களை விளம்பரம் செய்வதற்காகவும், தாங்கள் நடித்த விளம்பரங்களை பிரபலப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களை வெறுப்படையச் செய்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி