Priyadarshan: மகனுக்காக இணைந்த விவாகரத்து தம்பதி; குஷியில் கல்யாணி பிரியதர்ஷன்!
பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகனும், நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் சகோதரருமான சித்தார்த் பிரியதர்ஷனுக்கு திருமணம் நடந்துள்ளது.
மலையாள பிரபல இயக்குநரும், தமிழில் ‘காஞ்சிவரம்’ , ‘லேசா லேசா’, ‘கோபுர வாசலிலே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவருமானவர் இயக்குநர் பிரியதர்ஷன்; இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு நடிகை லிஸியை திருமணம் செய்து கொண்டார்; பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்தத்தம்பதிக்கு சித்தார்த் என்ற மகனும் கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இதில் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் ‘ஹீரோ’ ‘மாநாடு’ ஆகிய படங்களிலும், ‘புத்தம் புது காலை’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ஹ்ருதயம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் லிஸி தம்பதியின் மகனான சித்தார்த்தின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரியதர்ஷன் மற்றும் லிஸிஆகிய இருவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் தற்போது சமூகவலைதளாங்களில் வைரலாகி வருகிறது.
டாபிக்ஸ்