தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நான் நீக்கி விட்டேன்’..... ஓப்பனாக உண்மையை உடைத்த இலியானா

'நான் நீக்கி விட்டேன்’..... ஓப்பனாக உண்மையை உடைத்த இலியானா

Aarth V HT Tamil

Feb 17, 2022, 12:46 PM IST

google News
உடலை மிகவும் சிரமமின்றி மாற்றியமைக்கும் பயன்பாடுகளை செல்போனிலிருந்து நீக்கிவிடுங்கள் என இலியானா அறிவுரை கூறியுள்ளார்.
உடலை மிகவும் சிரமமின்றி மாற்றியமைக்கும் பயன்பாடுகளை செல்போனிலிருந்து நீக்கிவிடுங்கள் என இலியானா அறிவுரை கூறியுள்ளார்.

உடலை மிகவும் சிரமமின்றி மாற்றியமைக்கும் பயன்பாடுகளை செல்போனிலிருந்து நீக்கிவிடுங்கள் என இலியானா அறிவுரை கூறியுள்ளார்.

தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா கோலிவுட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ’கேடி’ படம் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டு மட்டும் தெலுங்கில் இவரது நடிப்பில் மட்டும் ஐந்து படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

பிறகு 2012 ஆம் ஆண்டு தமிழில், நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். அத்துடன் கோலிவுட்டிற்கு டாடா காண்பித்துவிட்டு இந்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இலியானா, நாள்தோறும் தான் செய்யும் செய்லகள் குறித்து பதிவிட்டு வருகிறார். அத்துடன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடுவது, தனது புகைப்படங்களை வெளியிடுவது என எப்போது தன்னை பிஸியாக வைத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு, இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இந்நிலையில் இலியானா சிகப்பு நிறம் உடையணிந்த பிகினி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் உடலை மிகவும் சிரமமின்றி மாற்றியமைக்கும் பயன்பாடுகளில் சிக்கிக்கொள்வது மிகவும் எளிதானது. உங்களை மிகவும் ஒல்லியாக அதிக நிறம் உள்ளது போல் மாற்றியமைக்கும் பயன்பாடுகளை நீக்கி விடுங்கள்.

நான் என் செல்போனில் இருக்கும் போட்டோ எட்டிங் செயலிகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன். இதைத் தேர்ந்தெடுத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபலங்கள் பொதுவாக தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை அப்படியே சமூக வலைதளங்களில் பதிவிடுவதில்லை. அவற்றில் நிறம் கூட்டுதல், உடலை மெல்லித்து காட்டுதல் ஆகிய எட்டிங் செய்தபிறகே பதிவிடுகின்றனர். அதிலிருந்து தான் மாறவேண்டும் என நினைத்து அவர் எடுத்த இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, இலியானா உடல் டிஸ்மார்ஃபிக் கோளாறுடன் போராடியதாகவும், அதனால் தற்கொலை எண்ணங்கள் கூட ஏற்பட்டதாகவும் 2017 ஆம் ஆண்டு நடந்த 21 ஆவது உலக மனநல காங்கிரஸில் தெரிவித்தார்.

பிரச்சனைகளை சமாளிக்க சிகிச்சை எப்படி உதவியது என்பதையும் இலியானா வெளிப்படுத்தினார். "குறைபாடுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், நீங்கள் யார் என்பதை நேசித்து கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இலியானா நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி இருக்கும் இரண்டு படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி