தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anuja Reddy: ‘அண்ணனோட நண்பர்.. எல்லாம் தெரிஞ்சும் என்ன காதலிச்சார்!- கணவர் குறித்து உருகிய அனுஜா ரெட்டி!

Anuja Reddy: ‘அண்ணனோட நண்பர்.. எல்லாம் தெரிஞ்சும் என்ன காதலிச்சார்!- கணவர் குறித்து உருகிய அனுஜா ரெட்டி!

Aug 28, 2024, 08:34 AM IST

google News
Anuja Reddy: என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் அவர் எப்பொழுதுமே தலையிட்டதே கிடையாது. அதைப்பற்றி எதுவும் கூறவும் மாட்டார். சில நேரங்களில் இரவு வருவதற்கு நேரம் ஆகிவிடும். - அனுஜா ரெட்டி! (கலாட்டா )
Anuja Reddy: என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் அவர் எப்பொழுதுமே தலையிட்டதே கிடையாது. அதைப்பற்றி எதுவும் கூறவும் மாட்டார். சில நேரங்களில் இரவு வருவதற்கு நேரம் ஆகிவிடும். - அனுஜா ரெட்டி!

Anuja Reddy: என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் அவர் எப்பொழுதுமே தலையிட்டதே கிடையாது. அதைப்பற்றி எதுவும் கூறவும் மாட்டார். சில நேரங்களில் இரவு வருவதற்கு நேரம் ஆகிவிடும். - அனுஜா ரெட்டி!

பிரபல நடிகையான அனுஜா ரெட்டி தன்னுடைய கணவர் குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அண்ணனுடைய நண்பர்

இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடைய கல்யாணத்தை காதல் திருமணம் என்றும் சொல்லலாம், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, நடத்தி வைக்கப்பட்ட திருமணம் என்றும் சொல்லலாம். எனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். பெரிய அண்ணனுடைய நண்பராகத்தான் என் கணவர் எனக்கு அறிமுகமானார். அப்போது நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன்.

அனுஜா ரெட்டி உடன் கணவர்

அண்ணனுடன் வீட்டிற்கு வரும் பொழுது என்னை பார்த்த அவருக்கு என் மீது காதல் வந்துவிட்டது. இதையடுத்து அவர் என்னை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தார். என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் அவர் எப்பொழுதுமே தலையிட்டதே கிடையாது. அதைப்பற்றி எதுவும் கூறவும் மாட்டார். சில நேரங்களில் இரவு வருவதற்கு நேரம் ஆகிவிடும். அப்போது மட்டும் என்னை வந்து அவர் பிக்கப் செய்து கொள்வார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ட்ராப் செய்யமாட்டார்.” என்று பேசினார். 

ஆடைகளுக்கு செலவு செய்ய மாட்டேன்

மேலும் பேசிய அவர், “நான் பெரிதாக ஆடைகளுக்கெல்லாம் செலவு செய்ய மாட்டேன். ஆனால் தங்கம் என்றால் எனக்கு உயிர். அதனால் அடிக்கடி தங்கம் வாங்குவேன். நகைகளை வாங்கும் பொழுது கூட, சுத்தமாக கல்  இல்லாத நகைகளாக பார்த்து வாங்குவேன். அவ்வளவு ஆசை ஆசையாக பார்த்து வாங்கிய நகைகள் ஒருமுறை திருடு போய்விட்டன. 

அதில் கிட்டத்தட்ட 80 முதல் 90 சவரன் நகைகள் இருந்தன. இறுதியில் அதை திருடியது யார் என்பதை நாங்களே கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம். ஆனால் அது மீண்டும் கிடைக்கவே இல்லை. அதற்கு கூட என்னுடைய கணவர் என்னை ஏதும் சொல்லவில்லை. காரணம் என்னவென்றால், அது நான் தெரிந்து செய்யவில்லை என்பது அவருக்கு புரிந்தது

நடிகை அனுஜா ரெட்டி கலாட்டா சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பேசி இருக்கிறார்.

கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது

இது குறித்து அவர் பேசும் போது, “திரைத்துறையில் அறிமுகமான புதிதில், நான் முதலில் கவர்ச்சியான பாடல்களில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் ஒரு சிறிய இடைவெளி விட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன். நான் கவர்ச்சியான பாடல்களில், கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து, எங்கள் வீட்டில் எதுவுமே கூறவில்லை. காரணம் என்னவென்றால், அவர்களுக்கு போதுமான சினிமா அறிவு என்பது இல்லை. அதனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவே இல்லை.

அம்மா, அப்பா இதுவரை நான் நடித்த படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததே கிடையாது. எப்போதுமே என்னுடைய அக்கா தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். கவுண்டமணி, செந்தில் ஆகிய இரண்டு பேருடனும் நான் நடித்திருக்கிறேன். கவுண்டமணி எல்லோரையும் கிண்டல் செய்வது போல, என்னையும் நிறைய கிண்டல் செய்திருக்கிறார்.

கவுண்டமணி அப்படி இல்லை.

அவர் பொதுவாக எந்த நபர் அவர் பக்கத்தில் இல்லையோ, அந்த நபரை பற்றி இன்னொருவரிடம் பேசுவார். ஆனால் செந்தில் மிகவும் நல்லவர். கவுண்டமணி அப்படி இல்லை. கவுண்டமணிக்கு கொஞ்சம் அகம்பாவம் அதிகம். ஒரு கட்டத்தில் அவர் எப்படி என்னிடம் அதிகாரமாக பேசுகிறாரோ, அதேபோல நானும் அவரிடம் திருப்பி பேச ஆரம்பித்தேன்.

ஆம், ஒரு நாள் இன்னொரு நடிகரை பற்றி அவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது நான் அவரிடம் எல்லோரையும் பற்றி பேசுகிறீர்களே, அப்படி என்றால் நீங்கள்..,? என்று கேட்டு விட்டேன். நான் அப்படி கேட்டதற்கு காரணம் இருக்கிறது ஏனென்றால், அப்போது அவர் எல்லா நடிகர்களை பற்றியும் மிகவும் மட்டம் தட்டி பேசிக் கொண்டிருந்தார். எனக்கு அது பிடிக்கவே இல்லை. இந்த நிலையில்தான் நான் அது போன்ற கேள்வியை கேட்டு விட்டேன். ஆனால் அதன் பின்னர் அவருடன் நான் நடிப்பது அப்படியே நின்று விட்டது.

மூட்டிக்கொண்ட சண்டை

அதன் பின்னர் அவர் நடிக்கும் படங்களில் இடம்பெற்ற சில பாடல்களில் நான் நடிக்கும் பொழுது கூட, அவர் என்னிடம் பேச்சுவார்த்தை வைக்கவே இல்லை. அதன் பின்னர் வாசு இயக்கிய உடன்பிறப்பே படத்தில் அவருடன் நான் நடித்தேன். அந்த படம் வாசு சாரின் படம் என்பதால், என்னை அவர் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்று நினைக்கிறேன்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி