தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd P.u.chinnappa: தமிழ் திரையுலகில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தவர்!

HBD P.U.Chinnappa: தமிழ் திரையுலகில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தவர்!

Manigandan K T HT Tamil

May 05, 2023, 05:00 AM IST

google News
P. U. Chinnappa: பி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா போன்றோர் இவருடன் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
P. U. Chinnappa: பி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா போன்றோர் இவருடன் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

P. U. Chinnappa: பி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா போன்றோர் இவருடன் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா என்பதை தான் சுருக்கமாக பி.யு. சின்னப்பா என்றழைக்கிறார்கள்.

தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினார் பி.யு.சின்னப்பா.

அவருக்கு இன்று (மே 5) பிறந்த நாள். பிரிட்டிஷ் இந்தியாவில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1916ம் ஆண்டு மே 5ம் தேதி பிறந்தார் சின்னசாமி.

பி.யு.சின்னப்பாவின் இயற்பெயர் சின்னசாமி தான். உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.

உலகநாத பிள்ளை நாடக நடிகராக இருந்தார். இதனால் இயல்பிலேயே பி.யு.சின்னப்பாவுக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

தந்தையிடம் பாடவும் கற்றுத் தேர்ந்தார். சின்னப்பாவுக்கு இசையில் பெரும் ஆர்வம் இருந்தது. தந்தை மேடையில் பாடும் பாடல்களைக் கேட்டுத் தானும் பாடுவார்.

கோயில்களில் நடக்கும் கூட்டு வழிபாடுகளில் பாடுவதற்கு இவரை அழைப்பார்கள். இசை மீது பெரிய ஆர்வம் இருந்ததால் படிப்பை இவர் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், தனித்திறமையை வளர்த்துக் கொண்டார். சிலம்பம், குஸ்தி போன்ற தற்காலப்பு கலைகளைக் கற்றுத் தேர்ந்தார்.

குடும்ப நிதி நிலைமை மோசமடைய புத்தக கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அவருக்கு ஆர்வம் முழுவதும் நடிப்பின் மீது தான் இருந்தது.

அந்த வேலையை உதறிவிட்டு நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்தார். டி. கே. எஸ். சகோதரர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். சின்னப்பாவிற்கு சிறு சிறு வேடங்களே கொடுக்கப்பட்டன.

பின்னர், வேறு சில நாடக கம்பெனிகளில் வாய்ப்பு வர பெரிய பிரதான வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பி.ஜி.வெங்கடேசன், எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா போன்றோர் இவருடன் இணைந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் சின்னப்பா அறிமுகமானார். சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி என்ற பெயரிலேயே நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. படம் பிராமாண்ட வெற்றி பெற்றது.

பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு.

இசையிலும் நடிப்பிலும் மிக இளம் வயதிலேயே புகழ்பெற்ற பி.யு.சின்னப்பா, 1951 செப்டம்பர் 23 அன்று காலமானார்.

மொத்தம் 25 திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். ஆனால், தமிழ் திரையுலகில் மறக்க முடியாத பெயராக முத்திரை பதித்தது பி.யு.சின்னப்பாவின் பெயர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி