Vijay Punch Dialogues: ஐ யம் வெயிட்டிங்.. விஜய்யின் தெறிக்கவிடும் பஞ்ச் வசனங்கள்
Jun 22, 2023, 04:13 PM IST
நடிகர் விஜய் தன் படங்களில் பேசிய தெறிக்கவிடும் பஞ்ச் வசனங்கள் பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஜய் என்றாலே நடனம், பஞ்ச் வசனங்களுக்கு பெயர் போனவர். அதனால் தான் கண்டிப்பாக அவரின் படங்கள் ஒரு பஞ்ச்வசனமாவது இயக்குநர்கள் வைக்கிறார்கள். நடிகர் விஜய் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் தன் படங்களில் பேசிய தெறிக்கவிடும் பஞ்ச் வசனங்கள் பற்றி பார்க்கலாம்.
- வாழ்க்கை ஒரு வட்டம் டா, இங்கு ஜெயுக்குறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயுப்பான் - திருமலை
- இங்க என்ன தோணுதோ, அத பேசுவேன் இங்க என்ன தோணுதோ, அத செய்வேன்.. - யூத்
- கபடி ஆடலாம், கிரிக்கெட் ஆடலாம், பரதநாட்டியம் ஆடலாம், கதகளி கூட ஆடலாம் டா, ஆனா ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாது மச்சி - கில்லி
- ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் - போக்கிரி
- நீ படிச்சா ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா - போக்கிரி
- ஐ யம் வெயிட்டிங் - துப்பாக்கி
- இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம் அந்த இடம், எல்லா ஏரியாலயும் ஐயா கில்லி டா - கில்லி
- நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட் ஆ இருக்கும் ஆனா அடி சரவெடி - குருவி
- வெற்றிக்குப் பின்னடி போகதா, உனக்கு பிடித்த தொழிலைத் தேர்ந்தெடுத்து எடுத்து திரைமயை வளத்துக்கோ, வெற்றி உன் பின்னால் வரும் - நண்பன்
- நீ வேற நாடு நான் வேற நாடு இல்லடா எல்லாரும் ஒரே நாடு, இந்தியா - தலைவா
- ஆல் இஸ் வெல் - நண்பன்
- எவ்வளோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா? - அழகிய தமிழ் மகன்
- யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருதோ அவன் தான் தமிழ் - போக்கிரி
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்