Chiyaan 62: ராவணனுடன் மோதும் அரக்கன்.. சித்தா டைரக்டர் போட்ட பக்கா ஸ்கெட்ச்.. யார் அவர் தெரியுமா?
Feb 09, 2024, 06:37 PM IST
இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு, பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் விக்ரம்.
இவர் அடுத்ததாக ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். கதையின் நாயகனாக விக்ரம் நடிக்கும் நிலையில், இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு, பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் அண்மைக்காலமாக எந்த வேடம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்தி, ‘நடிப்பு அரக்கன்’ எனும் பெயரை சம்பாதித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா, இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.
எஸ். ஜே. சூர்யா அவருடைய திரைப்பயணத்தில் இது வரை பார்த்திராத.. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சீயான் விக்ரமும், எஸ் ஜே சூர்யாவும் முதன்முறையாகக் கூட்டணி அமைத்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரையுலகினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பு முனையாக அமைந்த சேது.. அல்லோல் பட்ட இயக்குநர்!
விக்ரம் சினிமா வாழ்க்கையில் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ‘சேது’.. அந்த படத்தில் தான் எதிர்கொண்ட இன்னல்கள் குறித்து இயக்குநர் அமீர் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்தார்
அவர் பேசும் போது, “சேது படம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து பிரச்சனைதான். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அந்தப் படத்தை ராப்பகலாக உழைத்து உருவாக்கினோம். அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில், எனக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, நான் வெளியே வந்து விட்டேன்.
படம் முடிந்து ரிலீஸூக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில் திடீரென்று விக்ரம் எனக்கு ஒரு நாள் போன் செய்தார். போனில் அவர் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் இருந்தால்தான் எல்லாம் சரியாக நடக்கும் என்று கூறினார்.
ஆனால் நான் பாலாவின் மீது இருந்த கோபத்தில் நான் ஏன் அங்கு வரவேண்டும் என்று கேட்டேன்.இந்த நிலையில் பேசிக்கொண்டிருந்த போதே பாலாவிடம் போனை கொடுத்து விட்டார் விகரம். பாலா உன்னைக் கூப்பிட்டால் வர மாட்டாயா என்று திட்டி வரச்சொன்னான்.
உடனே அவனிடமும் நான் எதற்கு வரவேண்டும் என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன். மீண்டும் எனக்கு போன் வந்தது. பின்னர், இப்ப நீ இங்கு வருகிறாயா இல்லையா என்று சொல்ல அதன் பின்னர் நான் இங்கு இருந்து கிளம்பிச் சென்றேன். பெரும் போராட்டத்திற்கு பிறகு அந்தப்படத்தை ரிலீஸ் செய்தோம்.
திடீரென்று படத்தில் சில இடங்களில் போரடிப்பதாக தகவல் வந்தன. இந்த நிலையில் நான் பாலாவிடம் அனுமதி கூட கேட்காமல், மதுரை சினி பிரியா தியேட்டரில் எந்த இடத்தில் எல்லாம் போரடிப்பது போல இருந்ததோ, அந்த இடத்தை எல்லாம் கட் செய்தேன். பாலாவின் அண்ணன் இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தார். அவர் படம் பார்த்துவிட்டு காலை காட்சியை விட இப்போது படம் வேகமாக இருக்கிறது என்று சொன்னார்
இதனையடுத்து பாலா இங்கு வந்தான். விஷயத்தை சொன்னோம் உடனே அவன் எங்கெல்லாம் கட் செய்தாய் என்று என்னிடம் கேட்டான். நான் அந்த இடங்களையெல்லாம் சொல்ல, எல்லா ஊர்களிலும் நீயே சென்று செய்து விட்டு வந்து விடுகிறாயா கேட்டான். உடனே நான் எதுக்கு செல்ல வேண்டும் என்று கேட்க, டேய் போய் செய்து விட்டு வாடா? என்று சொல்ல, எடிட்டரை கூட்டிச் சென்று ஊர் ஊராக சென்று சரிசெய்தேன். அதன் பின்னர் படம் பிக்க அப் ஆகி எங்கேயோ சென்று விட்டது.” என்று பேசினார்
டாபிக்ஸ்