தவெகவில் இந்த பதவி கொடுத்தா ஓகே! பிக்பாஸிற்கு போக மாட்டேன்!ஓபனாக பேசிய சத்யராஜ்!
Nov 21, 2024, 03:15 PM IST
நடிகர் சத்யராஜ் தமிழ் மட்டும் அல்லாது பல இந்தியா மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வில்லனாக தமிழ் சினிமாவில் நுழைந்து கதாநாயகனாக மாறி தற்போது பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சத்யராஜ் தமிழ் மட்டும் அல்லாது பல இந்தியா மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வில்லனாக தமிழ் சினிமாவில் நுழைந்து கதாநாயகனாக மாறி தற்போது பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜீப்ரா எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சத்யதேவ் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சத்யராஜ் ரவுடியாக இருக்கும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பிஹைண்ட்உட்ஸ் யூடியூப் சேனலுக்கு நடிகர் சத்யராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஜீப்ரா படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பலவற்றை பகிர்ந்துள்ளார்.
நக்கல் நாயகனாக
தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு வெளியான சட்டம் என கையில் எனும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சத்யராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தான் நக்கல் பிடித்த ஒரு ஆளாக நடிப்பதே தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். தனது முதல் படத்தின் முதல் காட்சியே வெறும் ஓடி வருமாறு மட்டுமே இருந்தது. அதில் நடிக்கும் போது பயம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
கடலோர கவிதைகள் படம் பார்த்து பல பிரபலங்கள் இவரை வாழ்த்தியதாக தெரிவித்தார். மேலும் எம். ஜி. ஆர் ஒரு சமயம் தனக்கு முத்தம் கொடுத்து பாரத்தியதாகவும் தெரிவித்தார். தற்போது நடித்துள்ள இந்த ஜீப்ரா படத்திலும் ஒரு ரவுடி அப்பாவாகவும், நக்கல் பிடித்த ஆளாகவும் நடித்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் கையில் போட்டிருக்கும் மோதிரம் தந்தை பெரியார் கொடுத்ததாகவும், அதனை கலைஞர் கருணாநிதி தனக்கு போட்டு விட்டதாகவு தெரிவித்தார். அதிலும் குறிப்பாக இந்த மோதிரத்தை கலைஞர் போடும் போது பொறாமையுடன் போடுவதாகவும் கூறியதாக சத்யராஜ் தெரிவித்தார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் கூலி படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தவெகவில் பதவி
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு வருகிறது என்றால் எந்த பதவிக்கு செல்வீர்கள் என தொகுப்பாளர் கேட்டதற்கு. பெரியார் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்தால் போவேன் எனவும் கூறினார். மேலும் விஜயை சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவர் மேடையில் சிறப்பாக பேசியது பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் பெரியாரை கொள்கைத் தலைவராக எடுத்தது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கூலி படம் குறித்தான தகவல்களை வெளியே கூறக்கூடாது எனவும் கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்