Redin Kingsley: ‘ஆள்மாறாட்டம் பண்ணி தான் நெல்சனை ஜெயிக்க வைத்தோம்’ ரெடிங் கிங்ஸ்லி ஷாக் பேட்டி!
Sep 05, 2023, 01:35 PM IST
Director Nelson: வீட்டில் இருப்பதை பொறுக்கி எடுத்து வந்து, என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து, ‘டான்ஸ் கத்து தாங்க’ என்றார்கள்.
பிரபல நகைச்சுவை நடிகரான ரெடிங் கிங்ஸ்லி, முன்னணி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ:
‘‘நான் சினிமாவுக்கு வருவதற்கு முன், மாஸ்க் போட்டு டான்ஸ் ஆடும் வேலை செய்து கொண்டிருந்தேன். மூன்று ஆண்டுகள் அந்த பணியை தொடர்ந்தேன். மாஸ்க் கழற்றவே கூடாது. தோல் தெரியவே கூடாது. அப்போதெல்லாம் அது தான் அதிகபட்ச பொழுதுபோக்காக இருந்தது. டான்ஸ், நிகழ்ச்சிகள், DJ எல்லாமே அங்கு கற்றுக் கொண்டேன்.
அதன் பின் நானே நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்தேன். ஆயிரம் ஷோக்கள் நான் செய்திருப்பேன். கல்லூரிகளுக்கு, அணிகளுக்கு நாங்கள் நடனப்பயிற்சி செய்வோம். அப்படி தான் நெல்சன், பலூன் பட ரைக்டர் எல்லாம் சேர்ந்து ஒரு 6 பேர் டான்ஸ் பயிற்சிக்காக என்னிடம் வந்தார்கள்.
வீட்டில் இருப்பதை பொறுக்கி எடுத்து வந்து, என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து, ‘டான்ஸ் கத்து தாங்க’ என்றார்கள். கல்லூரி நிகழ்ச்சியாக அவர்கள் வந்திருந்தனர். இரு நாட்கள் பயிற்சி அளித்தேன், ஒருத்தணும் தேரவில்லை. காசை செலவு பண்ணிட்டேன். திருப்பி அனுப்பினால் காசு கொடுக்க வேண்டும். வேறு வழியில்லாமல், எங்க பசங்களை ட்ரெஸ் போட்டு ஆட வைத்து, அவங்களுக்கு கல்லூரியில் முதல் பரிசு வாங்கிக் கொடுத்தோம்.
அன்றிலிருந்து தான், நெல்சன் பழக்கம் தொடர்கிறது. நெல்சன் பயங்கரமான ஆள். நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, நம் பேச்சை மாட்டும் கவனிக்க மாட்டார், நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை இயக்குனர் பாணியில் தான் யோசிப்பார். அப்படி தான் வேட்டை மன்னன் படத்தில், நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அப்புறம் அந்த படம் ரத்தாகிவிட்டது. நானும், அவரும் அவரவர் வேலையை பார்க்க தொடங்கினோம்.
ஒவ்வொரு வருசம் போன் பண்ணுவார், ‘போட்டோ அனுப்பு’ என்பார். அனுப்புவேன், அடுத்து மறுபடியும் அனுப்புவார். இப்படியே தான் கேட்டுட்டு இருந்தார். திடீர்னு ஒரு நாள் வந்தால், ஆபிஸ் போட்டு பரபரப்பா இருக்கு. ‘ஓ.. நிஜமாவே ஷூட் போறோம் போல’ என்று அப்போ தான் உறுதியானது,’’
என்று அப்போது அவர் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.