Rajinikanth: ‘என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்’ திருமண்ணாமலையில் ரஜினி திடீர் தரிசனம்!
Jul 01, 2023, 10:04 AM IST
Rajini At Tiruvannamalai: அருணாச்சலேஸ்வரர் மற்றும் அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்தை பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அடையாளம் கண்டு விட்டதால் பக்தர்கள் கூட்டத்தில் அம்மணி அம்மன் கோபுரம் வரை அவர் கடும் நெருக்கடியில் சிக்கினார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடிகர் ரஜினி காந்த் திடீரென சாமி தரிசனம் செய்ததால், பக்தர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக சிவ வழிபாட்டில் அதிக நாட்டம் கொண்ட ரஜினி காந்த், அடிக்கடி இமயமலை பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தொடர்ந்து இன்றும் நடிப்பில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் மற்றும் ஜெயிலர் ஆகி படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், லால் சலாம் படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினி. இதற்காக மசூதி உள்ளிட்டஇடங்களில் ரஜினி திடீர் விசிட் அடித்தது பரபரப்பாக ட்ரெண்டிங் ஆனது.
லால் சலாம் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையை சுற்றி நடந்து வருகிறது. அதில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்துள்ள ரஜினி காந்த், காலை , மாலை என இரு வேலையும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார் என்று கூறப்பட்டது.
ஆனால் அவர் வருவது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருந்தது. இந்நிலையில் சனி பிரதோஷ நாளான இன்று சிறப்பு நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக சிவ தலங்களில் இன்றைய பிரதோச வழிபாடு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தான், இன்று காலை திடீரென அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார் ரஜினிகாந்த்.
அருணாச்சலேஸ்வரர் மற்றும் அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்தை பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அடையாளம் கண்டு விட்டதால் பக்தர்கள் கூட்டத்தில் அம்மணி அம்மன் கோபுரம் வரை அவர் கடும் நெருக்கடியில் சிக்கினார்.
இருப்பினும் கோயில் நிர்வாகிகள் அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சிறந்த சிவ பக்தரான ரஜினி காந்த், பிரதோச தினத்தில் சிவ வழிபாடு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்