தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lal Salaam: மகள் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி… ஹீரோ யார் தெரியுமா?

Lal Salaam: மகள் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி… ஹீரோ யார் தெரியுமா?

Aarthi V HT Tamil

Nov 05, 2022, 11:40 AM IST

google News
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பட அப்டேட் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பட அப்டேட் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பட அப்டேட் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அது தொடர்பான அறிவிப்பு நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உள்ளனர்.

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார். பிரவீன் பாஸ்கர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

லால் சலாம் என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி