HTExclusive: ‘மணி சார் ரொம்ப சைலண்ட்..ஆனா ஷங்கர் அப்படி இல்ல’ - நடிகர் பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
Aug 01, 2024, 10:22 AM IST
HT Exclusive: அவர் ஒரு மாதிரி ஸ்டைலா சீனை சொல்லிக்கொடுப்பார். அவர்கிட்ட இருக்குற இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன அப்படின்னா, அந்த சீனை நம்மளால பண்ண முடியும் அப்படிங்கிற நம்பிக்கைய, நமக்குள்ளயே விதைச்சிடுவார். - பிரசாந்த் எக்ஸ்க்ளூசிவ்!
Actor Prashanth: நன்றாக படித்து டாக்டராக மாற வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த பிரசாந்திடம் இயல்பாகவே இருந்த தகுதிகள், அவரை ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்தியது. அந்தப்படத்தின் வெற்றி, அவரை தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நாலாபுறங்களிலும் கொண்டு செல்ல, அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘செம்பருத்தி’ திரைப்படம் அவருக்கு வேறு மாதிரியான திருப்புமுனையைக்கொடுத்தது.
தொடர்ந்து, அடுத்தடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக, அதன் பின்னர் பிரசாந்த் தொட்ட உயரம் மணிரத்னமும், ஷங்கரும்தான். ‘திருடா திருடா’, ‘ஜீன்ஸ்’ என இரு வேறு படங்களில் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகர் பிரசாந்த் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேமாக அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
மணிரத்னம் ரொம்ப சைலண்ட்
அவர் பேசும் போது, “ திருடா, திருடா படத்துல மணி சார் கூட வொர்க் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைச்சிச்சு. சார் ரொம்ப ரொம்ப சைலண்ட். அதிகமா பேச மாட்டார். பத்து வார்த்தை பேசுற இடத்துல, இரண்டு வார்த்தை பேசிட்டு போயிடுவார்.
அவர் ஒரு மாதிரி ஸ்டைலா சீனை சொல்லிக்கொடுப்பார். அவர்கிட்ட இருக்குற இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன அப்படின்னா, அந்த சீனை நம்மளால பண்ண முடியும் அப்படிங்கிற நம்பிக்கைய, நமக்குள்ளயே விதைச்சிடுவார். அதனால நமக்கே அவர் அந்த சீனை அவர் எப்படி எடுக்கப்போறார் அப்படிங்கிற ஆர்வம் வந்துரும். அவர் கூட வேலை பார்த்தது ரொம்ப ஜாலியான அனுபவம்
எல்லாமே பிரமாண்டம்தான்
ஷங்கர் சாரை பொருத்தவரை, எல்லாமே பிரமாண்டமா இருக்கும். அவர் ஒரு சூப்பரான திங்கர். அவர்கிட்ட கற்பனை வளம் சும்மா அப்படி இருக்கும். எல்லாராலும், எப்படி வேணாலும் யோசிக்க முடியும். ஆனா, அத செயல்படுத்துறது ரொம்ப கஷ்டம். ஆனா, ஷங்கர் சார் தான் யோசிக்கிற எல்லாத்தையும் செயல்படுத்தி திரையில கொண்டு வந்துருவாரு. அது, அவர் போன்ற சில பேராலதான் முடியும்.
சுந்தர் சி எப்படி?
சுந்தர்.சி டைரக்டர் என்பதையும் தாண்டி, அவர் சூப்பரான மனிதர். அவர் ஒரு நடிகராக என்ன வேணாலும் பண்ணுங்க அப்படின்னு நமக்கு முழு சுதந்திரம் கொடுத்துருவார். வின்னர் படத்திலும், லண்டன் படத்திலும் அவருடன் ட்ராவல் பண்ண போது, அவ்வளவு ஜாலியா வேலை பார்த்தோம். அவர் எல்லா விஷயங்களையும் ரொம்ப கேஷூவலாக எடுத்துப்பார். எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். அவருடைய ஷூட்டிங் ஸ்பாட்டும் அப்படித்தான் இருக்கும்.
அப்பா ஸ்டைல் வேறு மாதிரி
அப்பா தியாகராஜன் பொருத்தவரை, அவர் ஒரு பயங்கரமான யூனிவர்சிட்டி. பழைய காலத்து டெக்னாலாஜியையும், புது காலத்து டெக்னாலாஜியையும் பேலன்ஸ் செய்து வேலை செய்வார். அவர்கிட்ட இருந்து தினமும் நான் ஏதாவது ஒன்ன கத்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு டைரக்டருக்கும், ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இவருடைய ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமானது.
இவர் நடிகர்களிடம் சீனை சொல்லும் போது கூட, தூரத்தில் இருந்து கத்தாமல், அருகே வந்து அமைதியாக அதனை சொல்லிக்கொடுப்பார். சில நேரங்களில், அவர் நடிப்பை சொல்லிக்கொடுக்கும் விதத்திலும், நடிப்பை வாங்கும் விதத்திலும், நடிகர்களுக்கு முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனால் அந்த சீனை நடிகர்கள் டப்பிங்கில் பார்க்கும் போது.. சார் சொன்னதுதான் சரி என்பதை புரிந்துகொள்வார்கள். என்னை பொருத்தவரை, எந்த இயக்குநராக இருந்தாலும் சரி, எப்போதுமே நான் என்னை அவர்களுக்கு தகுந்த மாதிரி மாத்திக்குவேன்.” என்றார்.
முழு பேட்டி விரைவில்..
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்