Prabhu Deva: வம்சத்திலேயே முதல் முறை; பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபுதேவா; மகிழ்ச்சி கடலில் குடும்பம்!
Jun 10, 2023, 04:59 PM IST
முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்ட வந்த பிரபுதேவா ஹிமானி சிங் என்ற பிசியோதெரபி மருத்துவரிடம் சென்றார். இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
அற்புதமான நடனத் திறமைக்கு பெயர் பெற்றவர் பிரபு தேவா. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நபராக வலம் வருகிறார்.
இவர் 1995 ஆம் ஆண்டு ராம் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதில் நொறுங்கிப் போனார் பிரபுதேவா
அதற்கு பிறகு பிரபு தேவாவிற்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. உடனே தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் பிரபு தேவா, நயன்தாரா இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டனர். அதனால் பிரபுதேவா தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் முதுகு வலி பிரச்சினையால் அவதிப்பட்ட வந்த பிரபுதேவா ஹிமானி சிங் என்ற பிசியோதெரபி மருத்துவரிடம் சென்றார். இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்த நிலையில் இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபு தேவா தன்னுடைய 50 பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பிரபுதேவாவும் அவரது மனைவியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வந்தனர். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிமானி சிங் பிரபுதேவா குறித்து நெகிழ்ச்சியாக பேசிய வீடியோவும் வைரலானது.
இந்த நிலையில் இந்தத்தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று வந்ததிற்கான காரணம் குழந்தை பிறப்புதானாம். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவே இருவரும் திருப்பதிக்கு சென்று இருக்கிறார்களாம்.
பிரபுதேவா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆண் குழந்தைகளே உள்ள நிலையில் பிரபுதேவாவிற்கு முதன் முறையாக பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதனால் குடும்பமே மகிழ்ச்சி கடலில் இருக்கிறதாம்.
டாபிக்ஸ்