தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mayilsamy: மக்களை ஏமாற்றாதீர்கள் - மயில்சாமி

Mayilsamy: மக்களை ஏமாற்றாதீர்கள் - மயில்சாமி

Aarthi V HT Tamil

Sep 18, 2022, 07:16 PM IST

google News
நடிகர் மயில்சாமி இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது என்றார்.
நடிகர் மயில்சாமி இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது என்றார்.

நடிகர் மயில்சாமி இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது என்றார்.

நடிகர் மயில்சாமி ஓட்டுகளுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள் என கோரிக்கை வைத்து உள்ளார். 

அவர் கூறுகையில், “சாதி, மதம் பேதம் பார்க்காமல் மற்றவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது தான் சரியாக இருக்கும். 

எனக்கு பீட்டர் அல்போன்ஸூம் வேண்டும், முகமது அலியும் வேண்டும், அனந்த ராமனும் வேண்டும். இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது.

உண்மையை பேசும்போது நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை. நான் இப்போதும் சொல்கிறேன். இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. 

மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்திருப்பது தான் இந்தியா. உங்கள் ஓட்டுகளுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள்.

மக்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். உங்களுக்குத்தான் திருப்பி பதிலடி கொடுப்பார்கள். உலகத்தில் எங்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம் மொழி முக்கியமில்லை” என்றார். 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி