தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mayilsamy Comedy Scenes: மறக்க முடியுமா… மயில்சாமியின் டாப் காமெடிகள்

Mayilsamy Comedy Scenes: மறக்க முடியுமா… மயில்சாமியின் டாப் காமெடிகள்

Aarthi V HT Tamil

Feb 19, 2023, 09:24 AM IST

google News
நடிகர் மயில்சாமி நடித்த நகைச்சுவை சீன்களை பார்க்கலாம்.
நடிகர் மயில்சாமி நடித்த நகைச்சுவை சீன்களை பார்க்கலாம்.

நடிகர் மயில்சாமி நடித்த நகைச்சுவை சீன்களை பார்க்கலாம்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி சாமி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். அவரது ம்றைவு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூள்

நடிகர் மயில்சாமி நடித்த நகைச்சுவை படத்திலேயே தூள் படத்தில் விவேக்கை ஏமாற்றி பணத்தை பறிக்கும் சீன் தான் தரமானதாக இருக்கும். திருப்பதிக்கு சென்று வருவதாக கூறுவார். அப்போது பார்சலில் லட்டுவிற்கு பதிலாக ஜிலேபி இருக்க, அதை விவேக்கிடம் சமாளிப்பதற்காக “திருப்பதியில இப்ப லட்டுக்கு பதிலா ஜிலேபி தான் கொடுக்குறாங்கணு ” என சொல்லி இருப்பார்.

தவசி

தவசி திரைப்படத்தில் மயில்சாமி ஒரே காட்சியில்  வந்து இருப்பார். ஆனால் அந்த சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இருப்பார். போலி மாந்திரீக வாதியாக வந்து வடிவேலுவிற்கு விபூதி அடித்து பணத்தை சுருட்டும் காட்சிகளில் கெத்து காட்டி இருப்பார்.

பாய்ஸ்

பாய்ஸ் திரைப்படத்தில் பாரில் வரும் ஒரே சீனில் நடித்து மயில்சாமி ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தி இருப்பார். நாயகன் மற்றும் அவரது நண்பர்களிடம், டைட்டில் பார்க்கில் வேலை செய்வதாக பொய் சொல்லி மது வாங்கி குடித்திருப்பார். 

உன்னை நினைத்து

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில், திருமணமாக உள்ள இளைஞராக நடித்து இருந்தார். 

அதில் தான் அழகாக வேண்டும் என்பதற்காக தங்க பஸ்பம் லேகியத்தை வாங்கி சாப்பிட்டு, கருப்பாக மாறி அவர் பேசிய வசனம் வயிறு குலுங்க சிரிக்கை வைத்தது.

சாணக்யா

சாணக்யா திரைப்படத்தில் வடிவேலுவுடன்  இணைந்து இருப்பார். ஒரு காமெடி சீனில் நடித்து இருந்தார். அதில், பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரு ஆட்டோவை பிளான் போட்டு மீட்டெடுக்கும் காட்சி சிரிக்கை வைத்தது.

உத்தமபுத்திரன்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் மயில்சாமி சில சீன்களில் மட்டுமே நடித்து இருப்பார். ஜெனிலியா சாலையில் லிப்ஃட் கேட்க இது சந்தோஷ் கார் என பேசி நகைச்சுவை பேசியது வரவேற்பை பெற்றது. 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி