Kavin: கைவிட்ட லாஸ்லியா.. வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்யும் கவின்
Aug 01, 2023, 10:38 AM IST
நடிகர் கவினுக்கு திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்த கவின், இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடரில், வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.இதையடுத்து இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கவின், கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இப்படம் தோல்வியடைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, இவர் நடிப்பில் சமீபத்தில், வெளியான 'டாடா' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான திரைப்படம், டாடா. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடன இயக்குனர் ஒருவர் தான் டைரக்டு செய்ய உள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க கவினை அணுகியதாகவும் அந்த படத்தில் நடிக்க கவின் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது கவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கவினுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை தான் கவின் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கவின் ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் மற்ற தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கவினுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
இது காதல் திருமணம் இல்லை என்றும் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை தான் கவின் திருமணம் செய்து கொள்ள போவதாககூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து கவின் ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை கவின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடிகை லாஸ்லியாவும், கவினும் பிக் பாஸ் வீட்டில் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இதை அவர்களே நிகழ்ச்சியிலும் உறுதி செய்து இருந்தனர் . பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்