தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அதிரடியாக வெளியான விருமன் ட்ரெய்லர்

அதிரடியாக வெளியான விருமன் ட்ரெய்லர்

Aarthi V HT Tamil

Aug 04, 2022, 09:35 AM IST

google News
நடிகர் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தி நடித்திருக்கும் விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

குட்டிப் புலி, கொம்பன் உள்ளிட்ட கிராமத்து கதைகளை கையில் எடுப்பவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கும் படங்களில் சாதி குறித்த சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் விருமன் என்ற ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்துள்ளார்.

நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று (ஆகஸ்ட் 3 ) நடைபெற்றது.

இந்த விழாவில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், நடிகர் சூர்யா, ஜோதிகா, நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பாரதி ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இதில் அதிதி ஷங்கர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியான ட்ரெய்லர் தரமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான, கஞ்சாபூவு கண்ணால பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி