தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Karthi Interview: 104 கிலோ எடை.. டெடி பேர் மாதிரி;கல்லூரியில் தாழ்வு மனப்பான்மை! - சோக பக்கத்தை பகிர்ந்த கார்த்தி!

Actor karthi interview: 104 கிலோ எடை.. டெடி பேர் மாதிரி;கல்லூரியில் தாழ்வு மனப்பான்மை! - சோக பக்கத்தை பகிர்ந்த கார்த்தி!

Nov 14, 2023, 12:20 PM IST

நடிகர் கார்த்தி தன்னுடைய உடல் எடை அதிகரிப்பு பற்றியும் அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பற்றியும் பேசி இருக்கிறார்.
நடிகர் கார்த்தி தன்னுடைய உடல் எடை அதிகரிப்பு பற்றியும் அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பற்றியும் பேசி இருக்கிறார்.

நடிகர் கார்த்தி தன்னுடைய உடல் எடை அதிகரிப்பு பற்றியும் அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை பற்றியும் பேசி இருக்கிறார்.

இது குறித்து கெளதம் மேனன் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்த கார்த்தி, “ நான் 104 கிலோ எடை இருந்தேன். என்னை டெடி பேர் என்பது போலதான் பார்ப்பார்கள். நான் ஆண்கள் பள்ளியில் தான் படித்தேன். அதன் பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தேன். அங்கும் முழுக்க முழுக்க ஆண்கள் தான். அந்த பக்கம் பெண்கள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இன்னொன்று என்னுடைய அப்பாவின் நல்ல பெயர் எங்களது பின்னாலேயே தொடர்ந்து வரும். எங்கே சென்றாலும் நாங்கள் தனியாக தெரிவோம். ஒளிந்தெல்லாம் ஓட முடியாது.  நாம் எதையும் செய்ய முடியாது. 

நானும் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன்தான். ஒரு பெண்ணை அப்ரோச் செய்து காதலை சொல்லும் அளவிற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. கல்லூரிக்கு சென்றால், எல்லோருமே என்னை விட அழகாக இருப்பது போன்ற தோன்றும். தாழ்வு மனப்பான்மையானது உச்சத்தில் இருக்கும். அதிலிருந்து எப்படி நான் வெளியே வந்தேன் என்பது இப்போது வரை எனக்கு தெரியவில்லை.

பையா திரைப்படத்திற்கு பிறகு தான் நிறைய பெண்கள் என்னிடம் வந்து, உங்களுடைய வேலை எங்களுக்கு பிடித்திருக்கிறது, உங்களை பிடிக்கும் என்று கூறினார்கள். 

அப்போதுதான் நம்மை கூட பெண்களுக்கு பிடிக்கிறதா என்பது எனக்கு தெரிந்தது. அதை நான் என் வாழ்க்கையில் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் உணர்ந்தேன். எடை அதிகமாக இருந்ததால்  ஓட ஆரம்பித்தேன்.  பிரச்சனை என்னவென்றால் எனக்கு அவ்வளவு ஈசியாக உடல் எடை குறையாது. உடல் அவ்வளவு சீக்கிரமாக ரிசல்ட் கொடுத்து விடாது. 

அந்த  சமயத்திலெல்லாம் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகுவேன். ஒரு நடிகனாக நான் மாற வேண்டும் என்று நினைத்த பொழுது கூட, நான் மிகவும் வலிமையான மனிதனாக மாற வேண்டும் என்று தான் நினைத்தேன். பிறகுதான் என்னுடைய உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தினேன்.  70% உங்களது உடல் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்து தான் செயல்படுகிறது. மீதி முப்பது சதவீதம் தான் ஒர்க் அவுட்.  அது குறித்தான புரிதலை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கற்றுக்கொண்டேன். ” என்று பேசினார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி