தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Kamal Hassan Wished Director Shankar

நிச்சயமாக இந்தியரே - வாழ்த்து சொன்ன கமலுக்கு, ஷங்கர் பதில்

Aarthi V HT Tamil

Aug 17, 2022, 04:25 PM IST

என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து நன்றி என கமல் ஹாசனுக்கு, இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.
என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து நன்றி என கமல் ஹாசனுக்கு, இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து நன்றி என கமல் ஹாசனுக்கு, இயக்குநர் ஷங்கர் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Selvaraghavan: ஐயோ.. உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்

Nadigar Sangam: நாசர் பெயரில் நிதி வசூல்.. காவல் நிலையத்தில் நடிகர் சங்கர் பரபரப்பு புகார்!

Gangai Amaran : வாயை பொத்திக் கொண்டு.. வைரமுத்து நல்ல மனுஷன் கிடையாது.. கர்வம் தலைக்கு ஏறிவிட்டது.. கங்கை அமரன் ஆவேசம்!

Ramayanam Serial: சீதையின் இதயநாயகன்.. மீண்டும் சன் டிவியில் இராமாயணம்.. ப்ரோமோ ரிலீஸ்!

படத்தின் கதைக்கு மட்டுமே முக்கியத்துவன் கொடுக்கும் மத்தியில் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் வல்லவர். 

இதனிடையே தற்போது இயக்குநர் ஷங்கர் தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2, ராம் சரணின் 15 ஆவது படம் ஆகியவற்றை இயக்கி வருகிறார். 

இதற்கிடையே இன்று ( ஆகஸ்ட் 17 ) ஷங்கர் தனது 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு #HBDShankar #Happybirthdayshankar ஆகிய ஹேஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் கமல் ஹாசன், ஷங்கரை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றார். 

இதற்கு இயக்குநர் ஷங்கர், ”நிச்சயமாக இந்தியரே. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி” என பதிலளித்துள்ளார்.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.