Kamal Hassan: தோத்த அரசியல்வாதி நான்.. தடலாடியாக பேசிய கமல்ஹாசன்.. ஒரு நொடி அமைதியான கூட்டம்!
Sep 21, 2024, 04:44 PM IST
Kamal Hassan:தோத்த அரசியல்வாதி நான்.. தடலாடியாக பேசிய கமல்ஹாசன்.. ஒரு நொடி அமைதியான கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Kamal Hassan - தோற்ற அரசியல்வாதியைக் கூட மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் எனவும், தோற்ற அரசியல்வாதி என என்னை தான் சொல்கிறேன் என்றும் மக்கள் நீதி மய்ய பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் விழாமேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘’இங்கே நான் அமர வரவில்லை. எல்லோரும் சொல்வாங்க, நீங்க அந்த சீட்டில் இருக்கணும்பாங்க. எந்த சீட். எந்த சீட் கொடுக்கப்பட்டாலும் உட்கார்ந்துட்டால், வேலை செய்யலைன்னு அர்த்தம். நடந்துகிட்டே இருக்கணும். நான் கத்துக்கிட்ட குரு. என் விமர்சனம் மூலம் எனக்கு பாடம் கத்துக்கொடுத்தவர், திரு. காந்தி அவர்கள். இத்தனை காலத்துக்குப் பின், அவரை நாம் மகாத்மாவாக வைத்திருப்பதற்குக் காரணமும் அவர் தான். அவரை வியப்பதில் எனக்கும் சந்தோஷம்.
காரணம், அது நாமும் செய்யக்கூடிய செயலாக இருக்கவேண்டும். காந்தியை இறக்கை வைத்த தேவதையாக மாற்றிவிட்டால், கால் இல்லாத பிசாசு ஆக நாம் அவரை மாற்றிவிட்டால், நாளை ஒரு காந்தி உருவாகமாட்டான். இங்கே இருக்கிறார்கள் என நம்புகிறேன். அவர்கள் பாதசாரிகளாக, நல்பேச்சில் இடம்பெறாமல் இருப்பதுதான், நாம் அனுபவிக்கும் சோகம்.
காந்தியைப் போல் பலர் வரவேண்டும்: நடிகர் கமல்ஹாசன்
காந்தியார் அத்தனை தீரத்துடன் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தவர். அந்தமாதிரி வாய்ப்பு இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள், இந்தியாவில். காந்தியைப் போல் பலர்வேண்டும். அவரைப்போல் நடக்க நமக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். காந்தி மாதிரி யார் வேணும்னாலும் இருக்கலாம். அவரிடம் இருக்கும் வீரமும் நேர்மையும் இருக்கிறதா? என்ற கேள்வியை நான் என்னை கேட்டுக்கொண்டவன்.
அந்த வீரத்தையும் நேர்மையையும் அன்றாடம் பழகிக்கொண்டிருப்பவன் நான். நமக்கு நேர்மை வந்துவிட்டது என்றால், நமக்கு நேர்மை வந்துவிட்டது என்று அயர்ந்து படுத்துவிட முடியாது.
நீங்கள் அயர்ந்து இருக்கும் நேரத்தில் எல்லாம், உங்கள் நேர்மைக்கு சோதனை வரும். எனக்கு வந்திருக்கிறது. அதிலிருந்து சாதுரியமாகத் தப்பித்துக்கொள்வதற்குப் பதிலாக, நேர்மையாக, வலித்தாலும் பரவாயில்லை என்று நின்று போராடும்போதுதான், ஒரு உண்மையான சத்யகிரஹியை சந்திக்கமுடியும்.
என்னால் முடியுமென்றால், உங்களாலும் முடியும் தான்: நடிகர் கமல்ஹாசன்!
சவரக்கண்ணாடியில் சத்யகிரஹியைப் பார்க்கவேண்டும் என்றால், நீங்கள் அப்படி வாழ வேண்டும். நான் அதையெல்லாம் செய்யப் புறப்பட்டுவிட்டேன். செய்துவிட்டேன். சாதித்துவிட்டேன் என்று சொல்லவில்லை. முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது. என்னால் முடியுமென்றால், உங்களாலும் முடியுமென்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எல்லாம் ஏங்க அரசியலுக்கு வர்றீங்க. நல்லா இருக்காதுங்க. அதுசரிவராது. ஏன்னு கேட்டேன். அதுக்கு ஒரு மாதிரி மூளைவேணும்ங்க. நான் என்ன வேட்டைக்கா போறேன். சாதுரியம் வேணும். பதுங்கி பாயணும் என்று எல்லாம் சொல்கிறீர்களே. அதெல்லாம் வேண்டாமே. அரசியலுக்குத் தானே வர்றேன். அதை விடுங்க.
பிக்பாஸுக்கு போறதுக்கே என்னை வேண்டான்னு சொன்னங்க. போனால் என்ன, மக்களைப் பார்த்துபேசக் கூடிய எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், மேடையாக இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு. அப்படியே பழகிவிட்ட பிள்ளை.
4 வயதில் இருந்து அனுபவித்தவன்: நடிகர் கமல்ஹாசன்
இந்த மேடையும் இந்த வெளிச்சமும் இந்த மலர்ந்த முகங்களும் நான்கு வயதில் இருந்து நான் பார்த்துக்கிட்டு இருக்கேன். இது அடிமைத்தனமாக எல்லாம் இல்லைங்க. இதுதான் என் வாழ்முறை. இதுதான் எனக்குச் சொல்லும்செய்தி. அதனால்தான், நான் அரசியலைத் தேர்ந்தெடுத்தேன். வெள்ளிக்கிழமை சினிமா ஓடவில்லை என்றால், வேண்டாமுங்க என்று சொல்வார்கள். ஆனால், மக்கள் அப்படியில்லை. நினைவில் வைச்சுக்குவாங்க. தோத்த அரசியல்வாதியைக் கூட ஞாபகம் வைச்சுக்குவாங்க. தோத்த அரசியல்வாதின்னு யாரைச் சொல்றீங்க. என்ன தான் சொல்றேன். தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை. பிரதமர் என்பதும் நிரந்தர பதவி அல்ல. அப்படி இருக்கக்கூடாது என்பதுதான், நாங்கள் விரும்பும் ஜனநாயகம்.
பட்டியல் போட்டு பேசலை. என் மனதில் இருப்பதை எல்லாம் பேசுகிறேன். தைரியமாகப் பேசலாம். என் சாயலில் பல மரங்கள் இங்கே இருக்கின்றன. அந்த தைரியத்தில் பேசுகிறேன்'' என நடிகரும் ம.நீ.ம தலைவருமான கமல்ஹாசன் உரைநிகழ்த்தினார்.
டாபிக்ஸ்