தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Manobala: மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது!

Director Manobala: மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது!

May 04, 2023, 09:06 PM IST

google News
மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.
மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.

மனோபாலா உடல் தகனம் செய்யப்பட்டது.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்து தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கியவர் மனோபாலா. ஆகாய கங்கை, பிள்ளை நிலா உள்ளிட்ட பல படங்களை டைரக்ட் செய்துள்ள இவர் ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்கவேட்டை உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வந்த இவர் நேற்று (04-05-2023) உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவரது இறப்பு திரைவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல்தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். நேற்றைய தினம் அவரது உடலுக்கு நடிகர்கள்,இயக்குநர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.  

இந்த நிலையில் இன்று (மே 04) நண்பகல் 12 மணி அளவில் சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த இறுதி ஊர்வலத்தின்போது ஏராளமான பொதுமக்கள் வழிநெடுக மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி