தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Bose Venkat: அடுத்தடுத்து துயரம்.. ஒரே நாளில் அக்கா, அண்ணனை இழந்த நடிகர் போஸ் வெங்கட்!

Actor Bose Venkat: அடுத்தடுத்து துயரம்.. ஒரே நாளில் அக்கா, அண்ணனை இழந்த நடிகர் போஸ் வெங்கட்!

Karthikeyan S HT Tamil

Jun 24, 2023, 06:49 AM IST

google News
ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மாரடைப்பு ஏற்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி நாடகம் மூலம் மக்கள் மத்தியில் போஸ் வெங்கட் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு 'கன்னிமாடம்' என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்போது சின்னத்திரை நடிகர் சங்க தலைவராகவும் போஸ் வெங்கட் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் இருந்தனர். இந்த இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் தன்னுடைய சகோதரியை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீதே விழுந்து அவரும் மரணம் அடைந்தார். அவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகத்தினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

அடுத்தடுத்து குடும்பத்தில் இரண்டு இறப்பு நிகழ்ந்ததால் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். தனது அக்காவையும், அண்ணனையும் இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்டுக்கு சமூகவலைத்தளம் மூலமாக பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி