Top 10 Cinema News: நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. பாலியல் குற்றச்சாட்டை மறுத்த ரியாஸ் கான் - டாப் 10 சினிமா செய்திகள்!
Aug 27, 2024, 08:43 AM IST
Top 10 Cinema News: நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார், இயக்குநர் அமீர் கருத்து, பாலியல் குற்றச்சாட்டை மறுத்த நடிகர் ரியாஸ் கான் உள்ளிட்ட டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்
நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். உடல்நிலை சரியில்லாமல், சில தினங்களாக தீவிர சிகிச்சையில் இருந்தார். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடிச்ச 'நட்பே துணை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்து வந்தார். பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர். திடீரென ஏற்பட்ட உடல் நலம் குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஷாக் கொடுத்த பிரித்விராஜ்
ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை தனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்றும், அந்த கமிட்டி உருவாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன் என்றும் மலையாள நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். அம்மா சங்கம் சரியாக செயல்படவில்லை. அதில் ஒரு பெண் உறுப்பினராவது இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அமீர் கருத்து
'வாழை' வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால் தான், இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் 'கொட்டுக்காளி' ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது வெகுஜன படம் கிடையாது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
தி கோட் அட்வான்ஸ் புக்கிங்
தி கோட் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் இந்த வார இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 6 மணி FDFS காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கோல்டன் ஸ்பேரோ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷ் சமீபத்தில் 'ராயன்' திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவு மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'கோல்டன் ஸ்பேர்ரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இப்பாடல் வரும் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.
நடிகை கங்கனாவுக்கு கொலை மிரட்டல்
நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்திருக்கும் ‘எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸை முன்னிட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படும் வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
வாழை வசூல் நிலவரம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'வாழை' திரைப்படம் கடந்த 4 நாட்களில் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது 'வாழை'.
சீமான் பாராட்டு
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொட்டுக்காளி' திரைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
நடிகர் ரியாஸ் கான் மறுப்பு
நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி பாலியல் புகார் கொடுத்து இருக்கும் நிலையில், ரியாஸ் கான் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அந்த பெண் யாரே என்றே எனக்கு தெரியாது என நடிகர் ரியாஸ் கான் தெரிவித்துள்ளார். முன்னதாக, நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் தன்னை செல்போன் வழியாக தொடர்புகொண்டு, 'என் ஆசைக்கு இணங்கக்கூடிய நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவை' என்று கூறியதாக, பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
டாபிக்ஸ்