Director Vishnuvardhan: விஷ்ணுவர்தன் படத்தில் ஹீரோவாகும் அதர்வா சகோதரர்! ஹீரோயின் யார் தெரியுமா?
Feb 10, 2024, 05:40 PM IST
தமிழில் கடைசியாக 2015இல் வெளியான யட்சன் படத்தை இயக்கினார் விஷ்ணு வர்தன். தற்போது தமிழில் 9 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தை இயக்குகிறார்.
விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிகர் அதர்வா சகோதரர் ஆகோஷ் முரளி நடிக்கிறார். கதாநாயகியாக அதீதி ஷங்கர் நடிக்கிறார்.
ரொமாண்டிக் பாணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடைபெற்று வந்தது. போர்ச்சுகல், ஸ்பெயினில் நடைபெற்ற படப்பிடிப்பு, பெங்களுரு, சென்னை ஆகிய நகரங்களிலும் நடந்தது.
இதையடுத்து படத்தின் டீஸர் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
விஷ்ணுவர்தன் சல்மானை வைத்து தி புல் என்ற பெயரில் பாலிவுட் படத்தை இயக்குகிறார். கடைசியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தமிழில் யட்சன் திரைப்படம் 2015இல் வெளியானது. இதன் பின்னர் 2015இல் ஜ5 ஓடிடி தளத்தில் வெளியான பிங்கர்டிப் என்ற தொடரை தயாரித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்