தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “குழந்தைய தத்தெடுக்கத்தான் இங்க.. அவன் தோத்தா நான் தோத்தமாதிரி தானே” - கணவர் குறித்து அபிராமி!

“குழந்தைய தத்தெடுக்கத்தான் இங்க.. அவன் தோத்தா நான் தோத்தமாதிரி தானே” - கணவர் குறித்து அபிராமி!

Oct 26, 2024, 08:45 AM IST

google News
போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அதை எல்லாம் அவர் எந்த விதத்திலும் அசௌகரியமாக உணர்ந்ததே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்தான் என்னுடைய முதல் மிகப்பெரிய ரசிகன். - கணவர் குறித்து அபிராமி!
போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அதை எல்லாம் அவர் எந்த விதத்திலும் அசௌகரியமாக உணர்ந்ததே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்தான் என்னுடைய முதல் மிகப்பெரிய ரசிகன். - கணவர் குறித்து அபிராமி!

போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அதை எல்லாம் அவர் எந்த விதத்திலும் அசௌகரியமாக உணர்ந்ததே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்தான் என்னுடைய முதல் மிகப்பெரிய ரசிகன். - கணவர் குறித்து அபிராமி!

பிரபல நடிகையான அபிராமி, தன்னுடைய கணவர் ராகுல் குறித்து அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பேசி இருந்தார்.

அவர் பேசும் போது, “ உண்மையில் என் கணவர் ராகுல் எனக்கு ஒரு நல்ல நண்பர். பள்ளிக்காலத்தில் இருந்தே அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு சினிமா, கிளாமர், புகழ் உள்ளிட்ட விஷயங்களிலெல்லாம் பெரிதாக ஈடுபாடு கிடையாது. அவர் எப்போதும் வாழ்க்கையை யதார்த்தத்தோடு பார்ப்பவர்.

ராகுல் மற்றும் மகளுடன் அபிராமி

நான்தான் அவ்வப்போது, நாம் ஒரு ஹீரோயின் என்ற ஆகாயத்தில் மிதந்து கொண்டிருப்பேன். அந்த சமயத்தில் அவர் என்னிடம், சற்று கீழே வாருங்கள் உலகம் வேறு மாதிரியானது என்பதை ஞாபகப்படுத்துவார். அது உண்மையில் எனக்கு தேவையும் பட்டது வெவ்வேறு மாற்று சிந்தனை கொண்ட நபர்கள் வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையும் பொழுது, அது மிகவும் நன்றாக இருக்கும். அது என் விஷயத்தில் நடக்கவும் செய்திருக்கிறது.

அவர் மிக மிக பாதுகாப்பான மனிதர். அதை ஏன் சொல்கிறேன் என்றால், வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது எனக்கு தான் அதிகமான அட்ராக்ட்க்‌ஷன் வரும். என்னிடம் மக்கள் நெருங்கி பேசுவார்கள். போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அதை எல்லாம் அவர் எந்த விதத்திலும் அசௌகரியமாக உணர்ந்ததே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்தான் என்னுடைய முதல் மிகப்பெரிய ரசிகன்.

அபி

வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவர், எனக்காக மட்டும் இங்கு வரவில்லை; முழு குடும்பத்திற்காகவும் இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டார். முதற்கட்டமாக நாங்கள் இங்கு வந்ததற்கான காரணம் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்காக… ஏனென்றால் அதை வெளிநாட்டில் செய்ய முடியாது.

அந்த சமயத்தில் அவருக்கும் இங்கு வேலை இருந்தது.கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் வெளிநாட்டில்தான் வசித்தோம். தற்போது எனக்கு இங்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அவ்வளவு நாள் அவருக்காக நான் அங்கே இருந்தேன். இப்போது இது எனக்கான நேரம். இதனால் அவர் எனக்காக இங்கே வந்திருக்கிறார்.

கணவன் மனைவியாக

கணவன் மனைவியாக இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் கணவன் மனைவியாக மட்டுமல்லாமல் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். உனக்கு என்ன தேவைப்படுகிறது? உன்னுடைய விருப்பம் என்ன? நீ ஏதாவது தனிப்பட்ட முறையில் சில விஷயங்களை இருக்க விரும்புகிறாயா? உள்ளிட்ட கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டும்

நாங்கள் அப்படியான வாழ்க்கை முறையில் இருக்கிறோம் காரணம் என்னவென்றால், அவர் ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தார் என்றால், அது என்னுடைய தோல்வியும் கூடத்தான். அவர் ஜெயிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட தான். நாங்கள் ஒரே குழு. அந்த வண்டியில் ஒரு சக்கரம் சரியில்லாமல் இருந்தால், அதை ஸ்க்ரூ வைத்து டைட் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கிறது” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி