திருமணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன், சிநேகன் மனைவிக்கு வளைகாப்பு - டாப் சினிமா செய்திகள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திருமணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன், சிநேகன் மனைவிக்கு வளைகாப்பு - டாப் சினிமா செய்திகள் இன்று

திருமணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன், சிநேகன் மனைவிக்கு வளைகாப்பு - டாப் சினிமா செய்திகள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 18, 2024 11:55 PM IST

திருமணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன், சிநேகன் மனைவிக்கு வளைகாப்பு, டேட்டிங்கில் பிக்பாஸ் பிரபலங்கள் உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

திருமணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன், சிநேகன் மனைவிக்கு வளைகாப்பு - டாப் சினிமா செய்திகள் இன்று
திருமணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன், சிநேகன் மனைவிக்கு வளைகாப்பு - டாப் சினிமா செய்திகள் இன்று

நில மோசடி வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் - கெளதமி பேச்சு

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே நடிகை கெளதமிக்கு 150 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக ரூ. 3.16 கோடி பெற்று மோசடி வழக்கில் காரைக்குடியை சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பனும், அவரது உதவியாளர் ரமேஷ் சங்கரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு கெளதமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எனக்கு நடந்த அநீதியை எதிர்த்து நியாத்துக்காக போராடுகிறேன். எனக்கு ஒத்துழைப்பு தரும் அனைவருக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்" என கூறினார்.

கங்குவா படத்துடன் கார்த்தி பட டீசர்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் வா வாத்தியார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இதன் டீசரை சூர்யாவின் கங்குவா படத்துடன் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்

திருமணத்துக்கு தயாரான ரம்யா பாண்டியன்

வளைவு நெளிவான இடுப்பு போட்டோ மூலம் ட்ரெண்டான இடையழகி ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபரும், யோகா பயிற்சியாளரை கரம் பிடிக்கிறார். இவரது திருமணம் நவம்பர் 8ஆம் தேதி ரிஷகேஷ் அருகே நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் நவம்பர் 15ஆம் சென்னையில் திருமண வரவேற்பு நடக்கிறது

பாடலாசிரியர் சிநேகன் மனைவிக்கு வளைகாப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாங்கள் பெற்றோராக இருப்பதை பாடலாசிரியர் சிநேகன் - நடிகை கன்னிகா ரவி அறிவித்தனர். இதையடுத்து கர்ப்பமாகி ஐந்து மாதம் ஆகியிருக்கும் நிலையில் கன்னிகா ரவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதன் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் "வரப்போகும் எங்கள் வாரிசினை

வரவேற்கும் ஐந்தாம் மாத வளையல் அணியும் விழா" என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்

டேட்டிங்கில் பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் மராத்தியில் போட்டியாளர்களாக இருந்த அர்பாஸ் படேல், தமிழில் காஞ்சனா படத்தில் நடித்த நிக்கி தம்போலி ஆகியோர் காதல் பறவைகளாக வலம் வந்தார்கள். பிக்பாஸ் வீட்டினுள் போலி காதலர்களாக இருப்பதாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர்கள் உண்மையான காதலர்கள் போல் ஒன்றாக பல இடங்களில் சுற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக வதந்தியும் பரவி வருகிறது

ஆபாச விடியோ குறித்து ஓவியா தரப்பில் புகார்

இணையத்தில் உலா வரும் ஆபாச விடியோ குறித்து சென்னை கமிஷனரிடம் நடிகர் ஓவியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது மார்பிங் செய்யப்பட்ட விடியோ என்றும், ஓவியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்றே தயார் செய்யப்பட்ட விடியோ என்றும் அவரது மேலாளர் புகாரில் கூறியுள்ளார்.

தவறான விடியோவை வெளியிட்டவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க ஓவியா தீர்க்கமாக இருந்ததாகவும், ஆனால் பிரச்சனையின் தீவிரம் தெரிந்து அவர்களின் விவரங்களை வெளியிடாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் வசூல் நிலவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வேட்டையன் படம் எட்டாவது நாளில் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது

தவெக மாநாட்டுக்கு செல்லும் ஜீவா

பிளாக் படத்தின் வெற்றி சந்திப்பு கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜீவா, "நேரம் இருந்தால் விஜய்யின் தவெக மாநாட்டுக்கு செல்வேன் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய ஜீவா, "நாங்கள் எல்லாம் கைத்தட்டலுக்கு ஏங்கும் ஜாதி. அதரகுதான் இது போன்ற படங்களை தேர்வு செய்து நடிக்கிறோம். பிளாக் படம் பல மாதங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய படம். ஆனால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை" என்றார்.

ஐந்தாம் வேதம் ட்ரெய்லர் வெளியீடு

மர்மங்கள் நிறைந்த பயணமாக, 90ஸ்களில் பலரின் பேவரிட் சீரியலாக இருந்த மர்மதேசம் தொடர் டச்சில் வெளியாகியிருக்கிறது இயக்குநர் நாகாவின் ஐந்தாம் வேதம் ஓடிடி சீரிஸ் ட்ரெய்லர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 25ஆம் தேதி முதல் ஸ்டிரீமிங் ஆக இருக்கிறது

கவினின் பிளடி பெக்கர் ட்ரெய்லர்

பிளாக் காமெடி பாணியில் உருவாகியிருக்கும் பிளடி பெக்கர் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளது. கோடிகளுக்கு ஆசைப்பட்டு பல பாடிகளுடன் கவின் சிக்கிக்கொள்ளும் விதமாக பரபர காட்சிகளுடன் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இடம்பிடித்துள்ளது

உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான்

ஷாருக்கான் திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமின்றி தனது அழகாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியலில் ஷாருக் இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலியன் டி சில்வா அறிவியல் ஆய்வு மூலம் மிகவும் அழகான நடிகர்களின் பட்டியலை உருவாக்கினார். இதில், ஷாருக்கான் 86.76 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.