Aasai First Look: ஆசை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
Sep 21, 2022, 09:00 PM IST
கதிர் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ஆசை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மலையாள மொழியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இஷ்க் என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகர் கதிரும், நாயகியாக நடிகை திவ்ய பாரதியும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஜீரோ படத்தின் இயக்குநரான சிவ்மோஹா இயக்கி வருகிறார்.
இந்த படத்தை ஈகிள் ஐ ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. தற்போது படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.
இந்த திரைப்படத்திற்கு ஆசை எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மாஸ் கதாநாயகனாக இருக்கும் நடிகர் அஜித் நடித்துக் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஆசை.
இப்படத்தின் தலைப்பையே தற்போது கதிர் நடிக்கும் திரைப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரில்லர் மற்றும் காதல் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்