தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Duraisenthil Kumar: எதிர்நீச்சல் முதல் கருடன் வரை- லாஜிக் இயக்குநராக ஜொலிக்கும் துரை செந்தில் குமாருக்கு பிறந்தநாள்!

HBD DuraiSenthil Kumar: எதிர்நீச்சல் முதல் கருடன் வரை- லாஜிக் இயக்குநராக ஜொலிக்கும் துரை செந்தில் குமாருக்கு பிறந்தநாள்!

Marimuthu M HT Tamil

Jul 02, 2024, 01:07 PM IST

google News
HBD DuraiSenthil Kumar: எதிர்நீச்சல் முதல் கருடன் வரையிலான படங்கள் மற்றும் லாஜிக் இயக்குநராக ஜொலிக்கும் துரை செந்தில் குமாருக்கு பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை!
HBD DuraiSenthil Kumar: எதிர்நீச்சல் முதல் கருடன் வரையிலான படங்கள் மற்றும் லாஜிக் இயக்குநராக ஜொலிக்கும் துரை செந்தில் குமாருக்கு பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை!

HBD DuraiSenthil Kumar: எதிர்நீச்சல் முதல் கருடன் வரையிலான படங்கள் மற்றும் லாஜிக் இயக்குநராக ஜொலிக்கும் துரை செந்தில் குமாருக்கு பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை!

HBD DuraiSenthil Kumar: எதிர்நீச்சல், காக்கிசட்டை, கருடன் போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணற்ற விஷயங்கள் நம்மிடம் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யார் இந்த ஆர்.எஸ். துரை செந்தில் குமார்?:

இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ஜூலை 2ஆம் தேதி, 1981ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், இயக்குநர் பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி திரைப்படத்தில் கடைசி உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன்பின், அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தில் மூன்றாவது உதவி இயக்குநராக உயர்ந்தார். 

எதிர்நீச்சல் தந்த திருப்புமுனை:

அதன்பின், இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பொல்லாதவன்,ஆடுகளம் படத்தில் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் பணிபுரிந்து இருக்கிறார். அதன் அடிப்படையில் நடிகர் தனுஷிடம் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில், ’எதிர்நீச்சல்’ படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறார், ஆர்.எஸ். துரை செந்தில்குமார். அப்போது அந்தக் கதைப் பிடித்துப்போகவே, அதனை சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்க தான் முன் வருவதாக அறிவித்தார், தனுஷ். இந்த ’எதிர் நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருக்க, பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும், நந்திதா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மே 1, 2013ஆம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று, ஹிட்டானது. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.

‘எதிர்நீச்சல்’படத்தை இயக்கியமைக்காக துரை செந்தில் குமார், சிறந்த குழுவுக்கான விஜய் அவார்ட்ஸை 2014ஆம் ஆண்டு பெற்றார்.

சிவகார்த்திகேயனை ஆக்‌ஷன் ஜானருக்கு மாற்றிய துரை செந்தில்குமார்:

துரை செந்தில் குமாரின் அடுத்த படம் காக்கி சட்டை. இப்படத்திலும் தன் முந்தைய படத்தின் ஹீரோவான சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். ஸ்ரீதிவ்யா, விஜய் ராஸ், பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின்மூலம் சிவகார்த்திகேயனை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்ற முயற்சித்து இருப்பார், துரை செந்தில் குமார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தோன்றிய சிவகார்த்தியேனின் தோற்றத்துக்கும், அவரது நடிப்புக்கும் பலரால் பாராட்டுக்களைப் பெற்றார்.

அடுத்து தனுஷ், திரிஷா, அனுபாமா பரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து உருவான படம் ‘கொடி’. இப்படத்தில் தனுஷ் இரட்டைவேடத்தில் நடித்டிருந்தார். ஒருவர் அரசியல்வாதியாகவும், ஒருவர் உதவிப் பேராசியராகவும் நடித்திருந்தார். இப்படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. திரிஷா சற்று நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

அடுத்து மீண்டும் தனுஷை வைத்து ‘பட்டாஸ்’ என்னும் படத்தை இயக்கியிருந்தார், துரை செந்தில்குமார். இப்படத்தில் ‘அடிமுறை’ கலையை அழிவின் விளிம்பில் இருந்து மீட்கப்படும் பாடுகளையும், அதனை அளிக்கத்துடிக்கும் அரசியலையும் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியிருப்பார், துரை செந்தில் குமார். இப்படத்திலும் தனுஷ் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அப்பா தனுஷுக்கு ஜோடியாக சினேகாவும், மகளுக்கு மெஹ்ரீன் பிர்ஸடாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இயக்குநர் ஆனபின்பும் மீண்டும் வெற்றிமாறனுக்குக் கீழ் பணிபுரிந்த துரைசெந்தில்குமார்:

அடுத்து மீண்டும் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 படத்தில், இணை இயக்குநராகப் பணியாற்றினார், துரை செந்தில்குமார். மேலும், ரயில் விபத்து சிக்குவன்ஸில், இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணிபுரிந்தார், துரை செந்தில் குமார்.

இந்நிலையில், சமீபத்தில் சூரி கதாநாயகனாக நடித்து, சசிகுமார் மற்றும் உன்னிமுந்தன் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த ‘கருடன்’ படத்தை இயக்கியிருந்தார், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். இப்படம் கமர்ஷியலாக 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனைப் புரிந்தது.

தற்போது லெஜண்ட் சரவணா உடன் இணைந்து, புதிய படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளார், துரை செந்தில்குமார். அத்தகைய பல வெற்றிப் படங்களை தந்த இயக்குநர் துரை செந்தில் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி