Adipurush : இத பாத்தீங்களா?.. ஆதிபுருஷ் படத்தின் காட்சியின் போது திடீரென திரையரங்கிற்குள் வந்த குரங்கு.. இதோ வீடியோ!
Jun 16, 2023, 11:21 AM IST
ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென திரையரங்கிற்குள் வந்த குரங்கு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் படம் இன்று (ஜூன் 16 ) வெளியாகி உள்ளது. இதில் பிரபாஸ் ஸ்ரீராமாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், தேவ்தத் நாகரே ஹனுமானாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
இதனிடையே ஆதிபுருஷர் வெளியாகி இருக்கும் திரையரங்குகளில் அனுமானுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள் அனுமனுக்கு, பூ, குங்குமம் கொண்டு பூஜை செய்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்த இப்படம், ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படத்திற்காக 9000 திரையரங்குகள், ஒதுக்கப்பட்டு உள்ளன. தெலுங்கு மொழிக்கும் 1500 திரைகளும், மற்ற அனைத்து மொழிகளுக்கும் 4000 திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் 3500 திரைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் படம் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் ஆதிபுருஷ் படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் காலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான 'ஆதிபுருஷ்' படத்தின் காட்சியின்போது திடீரென திரையரங்கிற்குள் குரங்கு நுழைந்துள்ளது. குரங்கை கண்ட ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி ஆரவாரம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவை நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தியேட்டர் ஆடிட்டோரியத்தின் ஒரு துவாரத்தில் இருந்து குரங்கு ஒன்று ஆதிபுருஷ் திரையை நோக்கி பார்த்து கொண்டிருந்தது. இந்த வீடியோதான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.