Aishwarya Dutta: ஆடியோ லான்ஞ்க்கு 10 லட்சம் கேக்குறாங்க! - குமுறும் இயக்குநர்!
Jan 30, 2023, 09:37 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 கேட்டதாக இயக்குநர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார்
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இயல்பாகவே நடனம் மீது அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆடினார். அதைத் தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்ட அவர், கமர்சியல் மியூசிக் வீடியோக்களிலும் நடித்தார்;
இதன் மூலம் கிடைத்த பிரபலம் அவரை சினிமாவில் கால் பதிக்க வைத்தது. பெங்காலி மற்றும் ஹிந்தியில் உருவான பிக்னிக் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தமிழில், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அருள்நிதி நடித்த ‘ஆறாவது சினம்’ விக்ரம் பிரபு நடித்த ‘சத்ரியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்; இறுதியாக இவரது நடிப்பில் ‘காஃபி வித் காதல்’ படம் வெளியானது; இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 -ல் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் அந்த போட்டியில் இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார்; அதைத்தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் இவர் மீது தற்போது இயக்குனர் ஒருவர் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்; அது என்ன புகார் என்றால், இவர் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரூபாய் 10 லட்சம் கேட்டு இருப்பதுதான்.
முன்னதாக ‘பச்சை என்கிற காத்து’ ‘மெர்லின்’ ‘எட்டி திக்கும் பற’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கீரா. இவர் தற்போது ‘இரும்பன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்; இந்த படத்தில் ஜூனியர் எம் ஜி ஆர் ராம், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு சென்ராயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்; இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்; இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஐஸ்வர்யா தாத்தா புறக்கணித்ததாக தீரா குற்றம் சாட்டி அதற்கான காரணத்தையும சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் கீரா கூறும் போது, “சரியான பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு ‘இரும்பன்’ படத்தில் வாய்ப்பு கொடுத்தோம். அந்தமான் தீவுகளில் படப்பிடிப்பு நடந்த போது அவர் நல்ல ஒத்துழைப்பை கொடுத்து நடித்தார்; ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடிக்க வேண்டி இருந்தது, அதற்கும் அவர் மனப்பூர்வமாக ஒத்துழைத்து நடித்தார். ஷூட்டிங்கில் நல்ல ஒத்துழைப்பை கொடுத்த அவர், படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்தார்.
படம் வெளியாகும் வரை இந்த படத்திற்காக முழுமையாக பணியாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நம்பிக்கையில் நாங்கள் அதற்காக பேசப்பட்ட சம்பளம் முழுவதையும் அவருக்கு கொடுத்து விட்டோம்; ஆனால் அவர் உறுதி அளித்தபடி படத்துக்கான எந்த விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை; பாடல் வெளியீட்டு உட்பட எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள வில்லை. பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைத்த போது, அவர் தான் ஒரு நிகிழ்ச்சியில் கலந்து கொண்டால் 10 லட்சம் ரூபாய் தருகிறார்கள். அந்த பணத்தை நீங்கள் தந்தால் உங்கள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறேன் என்றார்; அந்த அளவுக்கு எங்களிடம் பட்ஜெட் இல்லாத காரணத்தால், அவரை நாங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை” என்று பேசியுள்ளார்.
டாபிக்ஸ்