Sathi Leelavathi: அமெரிக்க இயக்குனரின் சதிலீலாவதியில் எம்.ஜி.ஆர்., எண்ட்ரி!
Mar 28, 2023, 05:45 AM IST
87 years Of Sathi Leelavathi: அவனுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் இதில் சைக்கிள் எங்க போவது? ஆனாலும் சிரமப்பட்டு வாங்கிய சான்ஸை தவற விட அவனுக்கு விருப்பமில்லை.
1936 ல் முதல்முதலாக அமெரிக்காவை சேர்ந்த இயக்குனர் தமிழில் படம் எடுக்கிறார். இதை தெரிந்து கொண்ட அந்த 17 வயது பையன் தினமும் ஸ்டுடியோ வாசலில் காத்து நின்று ஒரு சிறு வேஷமும் வாங்கி விடுகிறான். ஆனால் பல நாள் ஆகியும் அவனை வைத்து ஷூட்டிங் நடக்கவில்லை.
இந்த பையனுக்கு மிகுந்த வருத்தம். தினமும் வருவதும்,போவதுமாக இருந்தான். திடீரென ஒரு நாள் அவன் நடிக்கும் சீன் வந்தது. இயக்குனர் அவனை கூப்பிட்டு, "முதல் ஷாட் சைக்கிளில் வர வேண்டும். உங்கிட்ட சைக்கிள் இருக்கா"? என்று கேட்கிறார்.
அவனுக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் இதில் சைக்கிள் எங்க போவது? ஆனாலும் சிரமப்பட்டு வாங்கிய சான்ஸை தவற விட அவனுக்கு விருப்பமில்லை. "இருக்கு சார்"" என்றான். “அப்ப போய் எடுத்துட்டு வாய்யா” என டைரக்டர் சொன்னதும் வேகமாக என்ன செய்வதென யோசித்தபடி வெளியில் சென்று… அங்கு தெரிந்த பெட்டிக் கடையில் ஓரமாக நிறுத்தியிருந்த சைக்கிளை கடைக்காரருக்கு தெரியாமல் எடுத்து வந்து விட்டான்.
இதில் ஆச்சரியம் என்னான்னா அவனுக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவனிடம் இருந்தது. முதல் ஷாட் சைக்கிளில் வந்து குப்புற விழுந்தான். பொட்டென்று மண்டையில் அடி விழுந்தது.
“ஏன்டா, உண்மைய சொல்லு சைக்கிள் ஓட்ட தெரியுமா தெரியாதா?” என்று கேட்டுள்ளார் இயக்குனர். "தெரியாது சார்" என்று அந்த சிறுவன் சொல்ல, இதற்குள் சைக்கிள் காணோம் என்று கடைக்காரர் வந்து அதற்கும் திட்டு விழுகிறது. கெஞ்சி அழுது கொண்டே நடிக்க வேண்டி, கிடைச்ச வாய்ப்பை தவற விடக்கூடாதென்பதால் பொய் சொன்னதாக ஒப்புக்கொண்டான் அந்த சிறுவன்.
அவனுடைய தன்னம்பிக்கை முயற்சிக்காகவும், உண்மையை சொன்னதற்காகவும், சைக்கிள் ஓட்டத் தெரியாதவனை ஓட்டியபடி அந்த முதல் சீனை எடுத்து முடித்தனர். "சைக்கிள் இல்லை" என்று சொல்லியிருத்தால் அன்றே அவனுடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பார்கள்.
நம்பிக்கை,தைரியம் , உண்மை என அந்த நேரத்தில் அவனை சினிமாவின் கால் பதிக்க உதவியது. பின்னாளில் இந்த முயற்சியே அவனை நாடாளவும் வைத்தது.
அந்த படத்தின் பெயர்: சதிலீலாவதி
அந்த இயக்குனர்: எல்லீஸ் டங்கன்
அந்த சிறுவன்: எம்.ஜி.ஆர்.,
சைக்கிள் தந்து உதவிய பெட்டிக்கடைக்காரர் பின்னாளில் கிருஷ்ணன்_பஞ்சு என்ற இரட்டை இயக்குனர்களில் முதலாமவர் கிருஷ்ணன்!
-Sampatth Kumar முகநூல் பதிவு
டாபிக்ஸ்