36 Years of Enga Chinna Rasa : ’நயவஞ்சக சித்தியிடம் இருந்து சின்ன ராசாவை காப்பாற்றும் ருக்மணி’- சூப்பர் ஹிட் மூவி!
Jun 17, 2023, 05:00 AM IST
எங்க சின்ன ராசா வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் கடந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு வெளியான படம் எங்க சின்ன ராசா. இப்படத்தை கே. பாக்யராஜ் எழுதி, இயக்கி நடித்தார். மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற படம்.
இப்படம் தெலுங்கில் அப்பாயிகரு என்றும், இந்தியில் பீட்டா என்றும், கன்னடத்தில் அன்னய்யா என்றும், ஒடியாவில் சந்தனா என்றும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை பி. புட்டஸ்வாமய்யாவின் கன்னட நாவலான அர்த்தாங்கியால் ஈர்க்கப்பட்டது என சொல்லப்படுகிறது.
தந்தையின் இரண்டாவது மனைவியின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அப்பாவி ஹீரோ. ஹீரோவை தன்வசப்படுத்தி அடிமையாக நடத்தி சொத்துக்களை சித்தி கையகப்படுத்துகிறார். அந்த சொத்துகளை அவர் கையகப்படுத்தி ஆளுகிறாள். அவர் சொன்னால் தான் எல்லாம் நடக்கும் என்ற அளவுக்கு அனைத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளார்.
இந்நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் படித்த நல்ல அறிவாளியான புத்திசாலி பெண் ஹீரோவிற்கு மனைவியாக வருகிறாள். சித்தியிடம் சிக்கியுள்ள தன் கணவரை அந்த பெண் எப்படி புத்திசாலித்தனமாக மீட்கிறாள் என்பது தான் இப்படத்தின் கதை.
இப்படத்தில் சின்ன ராசாவாக கே.பாக்யராஜ், ருக்மணியாக ராதா, ருக்மணியின் அப்பாவாக ஜெய் கணேஷ், சின்ன ராசாவின் அப்பாவாக இடிச்சபுலி செல்வராஜ், சின்ன ராசாவின் சித்தியாக சி.ஆர்.சரஸ்வதி, சின்ன ராசாவின் மாமாவாக குலதெய்வம் ராஜகோபால், பயில்வான் ரங்கநாதன் கிராம மருத்துவராக
சின்ன ராசாவுக்கு பக்கபலமாக மண்ணாங்கட்டி சுப்ரமணியம் ஆகியோர் நடித்துள்ளனர்.
பத்மப்ரியா முதலில் முக்கிய பாத்திரமான மாற்றாந்தாய் பாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பாக்யராஜ் பத்மபிரிய இளமையாக இந்த பாத்திரத்திற்கு செட் ஆகாது என கருதி அவருக்கு பதிலாக சிஆர் சரஸ்வதியை நடிக்க வைத்தார்.
வாலியின் பாடல் வரிகளுடன் ஷங்கர்-கணேஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம். குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும்,
“எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
எடுடா மேளம் அடிடா தாளம்
இனிதான் கச்சேரி ஆரம்பம்
பாடுற பாட்ட காதுல போடு” இந்த பாடல் செம் ஹிட்.
ராதா பாக்கிராஜ் சேரும் பாடலான 'கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு
கெட்டி மேள தாளம் கேட்கும்
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
கழுத்துல ஏறனும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அதை நெனக்கையில்
நாக்குல தேன் ஊறுதே” காதல் ஜோடிகளுக்கு பிடித்த பாடல் இது.
அடுத்து ”மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலை காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு..
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலை காதல் வழியாவந்துச்சா வந்துச்ச சொல்லு சொல்லு” இந்த பாட்டை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஹிட்.
இப்படி இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட், படமும் ஹிட். எங்க சின்ன ராசா வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் கடந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்