தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithshaliniweddingday: 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’: அஜித் - ஷாலினி தம்பதிக்கு 24ஆவது திருமண நாள்

AjithShaliniWeddingDay: 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’: அஜித் - ஷாலினி தம்பதிக்கு 24ஆவது திருமண நாள்

Marimuthu M HT Tamil

Apr 24, 2024, 11:09 AM IST

google News
Ajith Shalini Wedding Day: நட்சத்திரத் தம்பதிகளான அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோர், இன்று தங்களது 24ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
Ajith Shalini Wedding Day: நட்சத்திரத் தம்பதிகளான அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோர், இன்று தங்களது 24ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.

Ajith Shalini Wedding Day: நட்சத்திரத் தம்பதிகளான அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோர், இன்று தங்களது 24ஆவது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.

Ajith Shalini Wedding Day: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், அஜித். இவர் தனது மனைவி நடிகை ஷாலினியை காதலித்து கரம்பற்றி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியினருக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நட்சத்திர ஜோடிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. புதிதாக காதலிப்பவர்கள்கூட, அஜித் - ஷாலினி போல், நமது காதலும் நிலைக்கவேண்டும் எனக் கருதுகின்றனர். இந்நிலையில் அஜித் - ஷாலினி காதல், திருமணத்தில் முடிந்ததுமட்டுமல்லாமல் 24ஆண்டுகள் நீடித்துள்ள நிலையில் அவரது காதல் குறித்து அறிவோம். 

அஜித் - ஷாலினி காதல்: 

நடிகர் அஜித், சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ஜோடியாக நடித்தபோது எடுத்தபடம் தான், அமர்க்களம். இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், தன் கையில் கத்தியை வைத்து அறுக்க முயற்சிக்கையில், அது உண்மையிலேயே அறுத்துவிட்டதாம். இதனால், பதறிப்போன, ஷாலினி, அவரை நன்கு பார்த்துக்கொண்டாராம். இதில் இம்ப்ரஸ் ஆன அஜித்,தன் காதலை சொல்ல, படப்பிடிப்புத்தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார், ஷாலினி. மேலும்,1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக எண்ணற்ற பரிசுப்பொருட்களை, இயக்குநர் சரண் மூலம் அஜித்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார், ஷாலினி. இதனால் நெகிழ்ந்துபோன அஜித் தனது காதல் குறித்து, தன் பெற்றோரிடமும் அஜித்தின் பெற்றோரிடமும் சொல்லி சம்மதம் பெற்றுள்ளார். அப்போது அஜித் பெரிய நடிகராக இல்லையென்றாலும், மகள் மீதும் வருங்கால மருமகன் அஜித் மீதும் வைத்த நம்பிக்கை காரணமாக, ஷாலினியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார், ஷாலினியின் தந்தை. 

அதன்பின் ஏப்ரல் 24, 2000ஆம் ஆண்டு, சென்னையில் வைத்து அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகன்போல் அஜித்தின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார் எனப் பலரும் கூறுவதைக் கேட்கமுடியும். அதன்பின், சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டினார், ஷாலினி.

அதன்பின் அஜித் வாழ்வில் கிடைத்த எண்ணற்ற ஏற்ற இறக்கங்கள், படத்தோல்விகள், இழிவுசொல்கள் இதையெல்லாம் இருவரும் சேர்ந்தே அனுபவித்தனர். அஜித்தும் மோட்டார் ரேஸில் ஈடுபட்டு என்ணற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஆளானார். அஜித் - ஷாலினி தம்பதியினர் 8 ஆண்டுகளுக்குப்பின்னர், அனோஷ்கா என்னும் பெண் குழந்தையைப் பெற்றனர். அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து, ஆத்விக் என்னும் ஆண் குழந்தையை பெற்று எடுத்தனர். சமீபத்தில், அமர்க்களம் படப்பிடிப்புத் தளத்தில், அஜித்தும் ஷாலினியும் காதலிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், ஷாலினி கேக் வெட்டி, அஜித்துக்கு ஊட்டினார்.

இதுதொடர்பான வீடியோ கூட வைரல் ஆனது. அந்த காணொலியில் ரெசார்ட் ஒன்றில், அஜித்தும் ஷாலினியும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டினர். மேலும், அஜித் - ஷாலினிக்கு அதே குறையாத காதலுடன் கேக்கினை ஊட்டினார். 

இந்நிலையில் அஜித்துக்கு இன்று(24.04.2024), 24ஆவது திருமண நாள் என்றதும் அவரது புகைப்படங்களைப் பகிர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அஜித்தின் திரை வாழ்க்கை:

பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாலும், தமிழில் அஜித் முதல்முறையாக நடித்து ரிலீஸான திரைப்படம், அமராவதி ஆகும். அன்றிலிருந்து விடாமுயற்சி படப்பிடிப்பு வரை, பழகுவதற்கு எளிமையானவராக அஜித் இருப்பதாகவும், நிறையபேருக்கு சத்தமில்லாமல் உதவி வருவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி