Ajith-Shalini Love: காதலில் வெள்ளிவிழா கண்ட அஜித் - ஷாலினி தம்பதி; கேக் வெட்டி கொண்டாட்டம்!
Ajith-Shalini Love: காதலில் வெள்ளி விழா கண்ட அஜித் - ஷாலினி தம்பதியினர், கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

Ajith-Shalini Love: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், அஜித். இவர் தனது மனைவி நடிகை ஷாலினியை காதலித்து கரம்பற்றியிருக்கிறார்.
இதனால் இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. புதிதாக காதலிப்பவர்கள் கூட, அஜித் - ஷாலினி போல், நமது காதலும் நிலைக்கவேண்டும் என்றார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரும், ஷாலினியும் காதலிக்கத் தொடங்கி 25ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதை ஒட்டி, நண்பர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
நடிகர் அஜித், சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ஜோடியாக நடித்தபோது எடுத்தபடம் தான், அமர்க்களம். இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், தன் கையில் கத்தியை வைத்து அறுக்க முயற்சிக்கையில், அது உண்மையிலேயே அறுத்து விட்டதாம். இதனால், பதறிப்போன, ஷாலினி, அவரை நன்கு பார்த்துக்கொண்டாராம். இதில் இம்ப்ரஸ் ஆன அஜித், ஷாலினியிடம் தன் காதலை சொல்ல, படப்பிடிப்புத்தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார். மேலும்,1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக எண்ணற்ற பரிசுப்பொருட்களை, இயக்குநர் சரண் மூலம் அஜித்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன அஜித் தனது காதல் குறித்து, தன் பெற்றோரிடமும் அஜித்தின் பெற்றோரிடமும் சொல்லி சம்மதம் பெற்றுள்ளார். அப்போது அஜித் பெரிய நடிகராக இல்லையென்றாலும், மகள் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, ஷாலினியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார், ஷாலினியின் தந்தை. அதன்பின் ஏப்ரல் 24, 2000ஆம் ஆண்டு, சென்னையில் வைத்து அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகன்போல் அஜித்தின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அதன்பின், சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டினார், ஷாலினி.