21 Yearas of Mounam Pesiyadhe: இயக்குநர் அமீரின் முதல் படம் மௌம் பேசியதே..
Dec 13, 2023, 05:50 AM IST
படம் முழுவதும் மௌனமாக இருந்த சூர்யா கடையில் தன் காதலை பேசிய மொழியே அத்தனை அழகுதான்.
கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வெளியான திரைப்படம் நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே .
இயக்குநர் அமீரின் முதல் படம் மௌனம் பேசியதே. இந்த படத்தில் நடிகர்கள் சூர்யா, நந்தா, நடிகை த்ரிஷா. லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவு மிக எளிமையாக எடுக்கப்பட் காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்டியது எனலாம்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்திருந்தார். இந்த படத்தில் ஆடாத ஆட்டம் எல்லாம், அறுபது ஆயிருச்சு, சின்ன சின்னதாய், என் அன்பே என் அன்பே உள்ளிட்ட பாடல்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த படம் தெலுங்கில் ஆதந்தே அடோ பைட் என ரீமேக் செய்யப்பட்டது.
இத்திரைப்படம் இயக்குநர் அமீரிடம் விக்ரம் உதவி இயக்குநராக பணியாற்றியபோது ஒரு தொலைக்காட்சி தொடராக இயக்க எண்ணி இருந்த ஒரு தலைப்பு இப்படத்திற்கு சூடப்பட்டது.
இந்த படம் நியூசிலாந்து, இத்தாலி, மொரீசியஸ், எகிப்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் எடுக்கப்பட்டது.
கதை
படத்தில் சூர்யாவும் நந்தாவும் நண்பர்கள். நந்தாவிற்கும், த்ரிஷாவிற்கும் திருமணம் நடத்த பெற்றோர் விரும்புவர். ஆனால் நந்தா வேறு ஒரு பெண்ணை விரும்புவார். அவர்களுக்கு கடைசியில் திருமணம் நடக்குமா என்பதாய் நகர்ந்தது. இந்நிலையில் த்ரிஷா தன்னை காதலிப்பதாக சூர்யா நினைப்பார். கடைசியில் சூர்யா த்ரிஷா இருவரும் இணைந்தனரா என்பதே படம்.
படத்தில் நந்தா கடைசிவரை ப்ளே பாயாக வலம் வந்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பார். காதல் என்றாலே வெறுக்கும் சூர்யா கடைசியில் எப்படி காதலில் விழுவார். படத்தின் முடிவில் அதிவேகமாக காரில் வரும் லைலா தன் சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
இந்தபடத்தில் சூர்யாவின் நடிப்பு மிகவும் புகழப்பட்டது.
படம் முழுவதும் மௌனமாக இருந்த சூர்யா கடையில் தன் காதலை பேசிய மொழியே அத்தனை அழகுதான். இந்த படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் மௌனமாக கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்